• Feb 03 2025

கிளிநொச்சியில் வீதிகளை ஆக்கிரமித்துள்ள கால்நடைகள்; விபத்தில் சிக்கும் பயணிகள்..!

Sharmi / Feb 3rd 2025, 11:59 am
image

கிளிநொச்சி A35 பிரதான வீதியில் புளியம்பொக்கனை, தருமபுரம், விசுவமடு, உடையார் கட்டு பகுதிகளில் இரவு, பகலாக கால்நடைகள் பிரதான வீதிகளில் நடமாடி திரிவது மற்றும் படுத்துறங்குவதன் காரணமாக இவ்வீதி ஊடாக போக்குவரத்தை மேற்கொள்ளும் சாரதிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

கால்நடை உரிமையாளர்களின் கவனயீன போக்கு காரணமாக, உயிராபத்து ஏற்படக்கூடிய நிலையிலும் பொருட் சேதங்கள் ஏற்படும் நிலையிலும் பெரும் அச்ச நிலைமையில் குறித்த வீதியால் பயணிப்பதாக வாகன சாரதிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் இதுவரை காலமும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இதன் காரணமாக பலர் காயமடைந்தும் பல கால்நடைகளும் உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகியிருந்தது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன சாரதிகள் தெரிவித்துள்ளனர்.


கிளிநொச்சியில் வீதிகளை ஆக்கிரமித்துள்ள கால்நடைகள்; விபத்தில் சிக்கும் பயணிகள். கிளிநொச்சி A35 பிரதான வீதியில் புளியம்பொக்கனை, தருமபுரம், விசுவமடு, உடையார் கட்டு பகுதிகளில் இரவு, பகலாக கால்நடைகள் பிரதான வீதிகளில் நடமாடி திரிவது மற்றும் படுத்துறங்குவதன் காரணமாக இவ்வீதி ஊடாக போக்குவரத்தை மேற்கொள்ளும் சாரதிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.கால்நடை உரிமையாளர்களின் கவனயீன போக்கு காரணமாக, உயிராபத்து ஏற்படக்கூடிய நிலையிலும் பொருட் சேதங்கள் ஏற்படும் நிலையிலும் பெரும் அச்ச நிலைமையில் குறித்த வீதியால் பயணிப்பதாக வாகன சாரதிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் இதுவரை காலமும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இதன் காரணமாக பலர் காயமடைந்தும் பல கால்நடைகளும் உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகியிருந்தது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன சாரதிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement