• Nov 13 2024

தூக்கத்திலே பிரிந்தது பிரபல நடிகரின் உயிர் பிரபலங்கள் திரண்டு அஞ்சலி!

Tamil nila / Nov 10th 2024, 9:01 am
image

பிரபல நடிகர் டெல்லி கணேஷ்  வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர்  தனது 80 வது வயதிலே  இன்று உயிரிழந்தார்.

சென்னையில் ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது. டெல்லி கணேஷ் கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார்.

 தூத்துக்குடியில் பிறந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். டெல்லி கணேஷ் நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களுக்குப் பெயர் பெற்றவர். இவர் நடிப்பு மட்டுமின்றி சிறந்த டப்பிங் கலைஞராகவும் திரைத்துறையில் பங்களித்துள்ளார்.

இயக்குநர் கே. பாலசந்தர் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான டெல்லி கணேஷ்  ரஜினி, கமல் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை, குணச்சித்திர நடிகராக டெல்லி கணேஷை பார்த்த நாம் முதல் முறையாக அபூர்வ சகோதரர்கள் படத்தில் பிரான்சிஸ் கதாபாத்திரம் மூலம் அவர் வில்லனாகவும் நடித்து கவனம் ஈர்த்தார்.

சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், ஆஹா, தெனாலி, சங்கமம், அவ்வை சண்முகி, இந்தியன் 2 உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். 

1979-ம் ஆண்டு பசி திரைப்படத்திற்கு "தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். அதோடு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும் டெல்லி கணேஷ் பெற்றுள்ளார். 

டெல்லி கணேஷின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தூக்கத்திலே பிரிந்தது பிரபல நடிகரின் உயிர் பிரபலங்கள் திரண்டு அஞ்சலி பிரபல நடிகர் டெல்லி கணேஷ்  வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர்  தனது 80 வது வயதிலே  இன்று உயிரிழந்தார்.சென்னையில் ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது. டெல்லி கணேஷ் கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். தூத்துக்குடியில் பிறந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். டெல்லி கணேஷ் நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களுக்குப் பெயர் பெற்றவர். இவர் நடிப்பு மட்டுமின்றி சிறந்த டப்பிங் கலைஞராகவும் திரைத்துறையில் பங்களித்துள்ளார்.இயக்குநர் கே. பாலசந்தர் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான டெல்லி கணேஷ்  ரஜினி, கமல் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை, குணச்சித்திர நடிகராக டெல்லி கணேஷை பார்த்த நாம் முதல் முறையாக அபூர்வ சகோதரர்கள் படத்தில் பிரான்சிஸ் கதாபாத்திரம் மூலம் அவர் வில்லனாகவும் நடித்து கவனம் ஈர்த்தார்.சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், ஆஹா, தெனாலி, சங்கமம், அவ்வை சண்முகி, இந்தியன் 2 உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். 1979-ம் ஆண்டு பசி திரைப்படத்திற்கு "தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். அதோடு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும் டெல்லி கணேஷ் பெற்றுள்ளார். டெல்லி கணேஷின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement