• Oct 09 2024

காலக்கெடுவை தளர்த்திய இலங்கை மத்திய வங்கி! ஏற்றுமதியாளர்களுக்கு வந்த மகிழ்ச்சி செய்தி

Chithra / Sep 8th 2024, 12:03 pm
image

Advertisement

 

சரக்கு ஏற்றுமதியாளர்களுக்கு தமது ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடுவை இலங்கை மத்திய வங்கி தளர்த்தியுள்ளது.

மேக்ரோ பொருளாதார அபிவிருத்திகளை, குறிப்பாக உள்ளூர் அந்நிய செலாவணி சந்தை நிலவரங்களின் அபிவிருத்திகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டம், ஏற்றுமதியாளர்கள் தமது ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாயாக மாற்றுவதற்கான காலக்கெடுவை கணிசமாக தளர்த்தியது மற்றும் இலங்கை மத்திய வங்கி “2024 ஆம் ஆண்டு இல. 01 இலங்கைக்கு ஏற்றுமதி வருவாயைக் கொண்டுவருவதற்கான விதிகளை” வெளியிட்டது. மேலும் இது 01.07.2024 திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானி எண் 2391/02 இல் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி விதிகள் 04.09.2024 அன்று பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு அன்று முதல் நடைமுறைக்கு வந்தன.

முந்தைய விதிகளின்படி, ஏற்றுமதி வருமானம் பெறப்பட்ட திகதியை தொடர்ந்து மாதத்தின் ஏழாவது நாளில் சம்பந்தப்பட்ட நிலுவைகள் கட்டாயமாக இலங்கை ரூபாயாக மாற்றப்பட்டிருக்க வேண்டும்.

இந்த விதிகளை அந்நிய செலாவணி திணைக்களத்தின் இணையத்தளத்தில் (www.dfe.lk) அணுக முடியும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

காலக்கெடுவை தளர்த்திய இலங்கை மத்திய வங்கி ஏற்றுமதியாளர்களுக்கு வந்த மகிழ்ச்சி செய்தி  சரக்கு ஏற்றுமதியாளர்களுக்கு தமது ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடுவை இலங்கை மத்திய வங்கி தளர்த்தியுள்ளது.மேக்ரோ பொருளாதார அபிவிருத்திகளை, குறிப்பாக உள்ளூர் அந்நிய செலாவணி சந்தை நிலவரங்களின் அபிவிருத்திகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டம், ஏற்றுமதியாளர்கள் தமது ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாயாக மாற்றுவதற்கான காலக்கெடுவை கணிசமாக தளர்த்தியது மற்றும் இலங்கை மத்திய வங்கி “2024 ஆம் ஆண்டு இல. 01 இலங்கைக்கு ஏற்றுமதி வருவாயைக் கொண்டுவருவதற்கான விதிகளை” வெளியிட்டது. மேலும் இது 01.07.2024 திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானி எண் 2391/02 இல் வெளியிடப்பட்டுள்ளது.மேற்படி விதிகள் 04.09.2024 அன்று பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு அன்று முதல் நடைமுறைக்கு வந்தன.முந்தைய விதிகளின்படி, ஏற்றுமதி வருமானம் பெறப்பட்ட திகதியை தொடர்ந்து மாதத்தின் ஏழாவது நாளில் சம்பந்தப்பட்ட நிலுவைகள் கட்டாயமாக இலங்கை ரூபாயாக மாற்றப்பட்டிருக்க வேண்டும்.இந்த விதிகளை அந்நிய செலாவணி திணைக்களத்தின் இணையத்தளத்தில் (www.dfe.lk) அணுக முடியும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement