• Nov 25 2024

தமிழக மீனவர் பிரச்சனையில் தலையிடாத மத்திய அரசு...! பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்...!

Sharmi / Feb 26th 2024, 2:49 pm
image

தமிழக மீனவர் பிரச்சனையில் தலையிடாத மத்திய அரசை கண்டித்து நாளை பாம்பன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராமநாதபுரம் பாமனின்,  அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாடோ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஒன்றிய அரசு மற்றும் இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் மீதான விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையிலும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ். ராஜேஷ்குமார், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாடோ ஆகியோர் முன்னிலையில் நாளை இராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் கடலில் மீனவர்களை ஒன்று திரட்டி கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேவேளை எதிர்வரும் 28ஆம் திகதி அன்று காலை தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில், ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டங்கள் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


தமிழக மீனவர் பிரச்சனையில் தலையிடாத மத்திய அரசு. பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம். தமிழக மீனவர் பிரச்சனையில் தலையிடாத மத்திய அரசை கண்டித்து நாளை பாம்பன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இராமநாதபுரம் பாமனின்,  அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாடோ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் ஒன்றிய அரசு மற்றும் இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் மீதான விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையிலும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ். ராஜேஷ்குமார், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாடோ ஆகியோர் முன்னிலையில் நாளை இராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் கடலில் மீனவர்களை ஒன்று திரட்டி கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.அதேவேளை எதிர்வரும் 28ஆம் திகதி அன்று காலை தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில், ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டங்கள் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement