• Mar 18 2025

பாராளுமன்றத்தில் சான்றிதழ்களை வழங்க முடியாது! அசோக ரன்வல திட்டவட்டம்

Chithra / Feb 16th 2025, 1:28 pm
image


தனது கல்வித் தகமைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்துள்ள முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல,  அத்தகைய கோரிக்கைகள் வெறும் அரசியல் தந்திரோபாயங்கள் என்று கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் கல்வி தகமைகளை வழங்குவதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், அது மக்களின் பிரச்சினை அல்ல என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செல்வியில் கூறியதாவது

சான்றிதழ்களை வழங்க பாராளுமன்றத்தில் ஒரு முறை உள்ளதா? அத்தகைய பாரம்பரியம் உள்ளதா? இவை இழிவான தந்திரோபாயங்கள். நாங்கள் பாராளுமன்றத்தில் மிக முக்கியமான பணிகளைச் செய்கிறோம்.

விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தனது கல்வித் தகுதிகள் குறித்து பொதுமக்கள் விசாரித்ததைத் தொடர்ந்து, ரன்வல இரண்டு மாதங்களுக்கு முன்பு இராஜினாமா செய்துள்ளார்.

எந்தவொரு தவறான கூற்றுகளையும் மறுத்தாலும், ஜப்பானின் வசேடா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்து தனது முனைவர் பட்டத்தை சரிபார்க்க தேவையான சில ஆவணங்கள் தற்போது கிடைக்கவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் சான்றிதழ்களை வழங்க முடியாது அசோக ரன்வல திட்டவட்டம் தனது கல்வித் தகமைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்துள்ள முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல,  அத்தகைய கோரிக்கைகள் வெறும் அரசியல் தந்திரோபாயங்கள் என்று கூறியுள்ளார்.பாராளுமன்றத்தில் கல்வி தகமைகளை வழங்குவதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், அது மக்களின் பிரச்சினை அல்ல என்றும் கூறியுள்ளார்.இது தொடர்பில் அவர் தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செல்வியில் கூறியதாவதுசான்றிதழ்களை வழங்க பாராளுமன்றத்தில் ஒரு முறை உள்ளதா அத்தகைய பாரம்பரியம் உள்ளதா இவை இழிவான தந்திரோபாயங்கள். நாங்கள் பாராளுமன்றத்தில் மிக முக்கியமான பணிகளைச் செய்கிறோம்.விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.தனது கல்வித் தகுதிகள் குறித்து பொதுமக்கள் விசாரித்ததைத் தொடர்ந்து, ரன்வல இரண்டு மாதங்களுக்கு முன்பு இராஜினாமா செய்துள்ளார்.எந்தவொரு தவறான கூற்றுகளையும் மறுத்தாலும், ஜப்பானின் வசேடா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்து தனது முனைவர் பட்டத்தை சரிபார்க்க தேவையான சில ஆவணங்கள் தற்போது கிடைக்கவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement