• Nov 28 2024

பரீட்சை மோசடி குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தியில்லை - குற்றம்சுமத்தும் இலங்கை ஆசிரியர் சங்கம்

Chithra / Oct 15th 2024, 9:25 am
image

 

பரீட்சை மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 473 பேருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தியடைய முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் பிரச்சினையின் அடிப்படையில் அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பரீட்சை மோசடிகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் மீது  மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளால் திருப்தி அடைய முடியாது என்றும் பரீட்சை முறைகேடு செய்பவர்களுக்கு ஒரே தண்டனை தேர்வுக்கு தடை விதிப்பதுதான் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், தண்டனைகளை நிர்ணயிக்கும் அதிகாரங்களை மாகாணக் கல்விப் பணிப்பாளர் வழங்கியுள்ள போதிலும், சில குற்றச்சாட்டுகளுக்கு தண்டனைகள் மற்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்படாத நிலை காணப்படுவதாக ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்தார்.

மேலும் எதிர்காலத்தில் நம்பகத்தன்மையுடன் பரீட்சைகளை எதிர்கொள்ளும் திறன் இல்லாவிட்டால் பரீட்சை திணைக்களத்தின் செயற்பாடு என்ன என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் கேள்வி எழுப்பயுள்ளார்.

பரீட்சை மோசடி குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தியில்லை - குற்றம்சுமத்தும் இலங்கை ஆசிரியர் சங்கம்  பரீட்சை மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 473 பேருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தியடைய முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் பிரச்சினையின் அடிப்படையில் அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் இதனைத் தெரிவித்துள்ளார்.அத்துடன் பரீட்சை மோசடிகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் மீது  மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளால் திருப்தி அடைய முடியாது என்றும் பரீட்சை முறைகேடு செய்பவர்களுக்கு ஒரே தண்டனை தேர்வுக்கு தடை விதிப்பதுதான் என்றும் அவர் தெரிவித்தார்.அத்துடன், தண்டனைகளை நிர்ணயிக்கும் அதிகாரங்களை மாகாணக் கல்விப் பணிப்பாளர் வழங்கியுள்ள போதிலும், சில குற்றச்சாட்டுகளுக்கு தண்டனைகள் மற்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்படாத நிலை காணப்படுவதாக ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்தார்.மேலும் எதிர்காலத்தில் நம்பகத்தன்மையுடன் பரீட்சைகளை எதிர்கொள்ளும் திறன் இல்லாவிட்டால் பரீட்சை திணைக்களத்தின் செயற்பாடு என்ன என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் கேள்வி எழுப்பயுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement