• Dec 13 2024

பிரான்சுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பினை முடிவுக்கு கொண்டு வந்த சாட்!

Tharmini / Nov 30th 2024, 10:13 am
image

முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்சுடனான தனது பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக சாட் கூறியுள்ளது.

இது பிரெஞ்சு வீரர்கள் மத்திய ஆபிரிக்க நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தும்.

நாட்டின் இறையாண்மையை மறுவரையறை செய்வதற்காக அதன் முன்னாள் காலனித்துவ ஆட்சியாளரான பிரான்சுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக சாட் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அப்டெராமன் கௌலமல்லா (Abderaman Koulamallah) தெரிவித்துள்ளார்.

இது ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் மத்திய ஆபிரிக்க நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்த முடிவு ஒரு வரலாற்று திருப்புமுனையை குறிக்கிறது.

ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முடிவு, சாட் அதன் மூலோபாய கூட்டாண்மைகளை தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்ப மறுவரையறை செய்ய அனுமதிக்கும் என்றும் அவர் கூறினார்.

இது குறித்து பிரான்ஸ் அரசாங்கத்திடம் இருந்து உடனடி பதில் எதுவும் கிடைக்கவில்லை.

பிராந்தியப் படையினருடன் சேர்ந்து இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக பல ஆண்டுகளாகப் போரிட்ட பின்னர் நைஜர், மாலி மற்றும் புர்கினா பாசோவில் இருந்து அண்மைய ஆண்டுகளில் வெளியேற்றப்பட்டு, பிரான்ஸ் ஒரு பெரிய இராணுவப் பிரசன்னத்தைத் தக்க வைத்துக் கொண்ட பிராந்தியத்தின் கடைசி நாடுகளில் சாட் ஒன்றாகும்.

பிரான்சுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பினை முடிவுக்கு கொண்டு வந்த சாட் முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்சுடனான தனது பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக சாட் கூறியுள்ளது.இது பிரெஞ்சு வீரர்கள் மத்திய ஆபிரிக்க நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தும்.நாட்டின் இறையாண்மையை மறுவரையறை செய்வதற்காக அதன் முன்னாள் காலனித்துவ ஆட்சியாளரான பிரான்சுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக சாட் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அப்டெராமன் கௌலமல்லா (Abderaman Koulamallah) தெரிவித்துள்ளார்.இது ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் மத்திய ஆபிரிக்க நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்த முடிவு ஒரு வரலாற்று திருப்புமுனையை குறிக்கிறது.ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முடிவு, சாட் அதன் மூலோபாய கூட்டாண்மைகளை தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்ப மறுவரையறை செய்ய அனுமதிக்கும் என்றும் அவர் கூறினார்.இது குறித்து பிரான்ஸ் அரசாங்கத்திடம் இருந்து உடனடி பதில் எதுவும் கிடைக்கவில்லை.பிராந்தியப் படையினருடன் சேர்ந்து இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக பல ஆண்டுகளாகப் போரிட்ட பின்னர் நைஜர், மாலி மற்றும் புர்கினா பாசோவில் இருந்து அண்மைய ஆண்டுகளில் வெளியேற்றப்பட்டு, பிரான்ஸ் ஒரு பெரிய இராணுவப் பிரசன்னத்தைத் தக்க வைத்துக் கொண்ட பிராந்தியத்தின் கடைசி நாடுகளில் சாட் ஒன்றாகும்.

Advertisement

Advertisement

Advertisement