• Dec 24 2024

ரணிலால் அநுர அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்! எச்சரிக்கும் உதய கம்மன்பில

Chithra / Dec 23rd 2024, 8:43 am
image

 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்துக்கு சவால் விடும் பிரதான நபராக செயற்படலாம் என  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து குறுகிய காலத்தில் மீட்சிப் பெற்றமை குறித்து வங்குரோத்து நிலையடைந்துள்ள உலக நாடுகள் ரணில் விக்ரசிங்கவிடம் ஆலோசனை பெறுகின்றமை சிறப்பம்சமாகும் எனவும், உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசியலில் இருந்து முழுமையாக தான் ஓய்வுப்பெறவில்லை. செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபட்டுள்ளோம். வெற்றியும், தோல்வியும் என்றும் நிலையானதல்ல.

2020 ஆம் ஆண்டு பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றிப் பெற்ற  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 2024 ஆம் ஆண்டு படுதோல்வியடைந்தது. 

அதேபோல் அன்று 3 ஆசனங்களை பெற்ற தேசிய மக்கள் சக்தி இன்று 159 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஆகவே அரசியலில் ஏதும் நடக்கலாம்.

ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வுப் பெறவில்லை. இந்த அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் பிரதான நபராக அவர் செயற்படலாம். ஏனெனில் அவரது பொருளாதார கொள்கைகளையே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செயற்படுத்துகிறார்.

2022 ஆம் ஆண்டு நாடு வங்குரோத்து நிலையடைந்த போது தனிநபராகவே ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பொறுப்பேற்றார். குறுகிய காலப்பகுதியில் நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டது.

பல ஆண்டுகாலமாக வங்குரோத்து நிலையில் உள்ள ஆஜன்டீனா, லெபனான், சிம்பாபே நாடுகள் இன்றும் வங்குரோத்து நிலையில் இருந்து மீளவில்லை என்றார்.

ரணிலால் அநுர அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால் எச்சரிக்கும் உதய கம்மன்பில  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்துக்கு சவால் விடும் பிரதான நபராக செயற்படலாம் என  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.பொருளாதார நெருக்கடியில் இருந்து குறுகிய காலத்தில் மீட்சிப் பெற்றமை குறித்து வங்குரோத்து நிலையடைந்துள்ள உலக நாடுகள் ரணில் விக்ரசிங்கவிடம் ஆலோசனை பெறுகின்றமை சிறப்பம்சமாகும் எனவும், உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.அரசியலில் இருந்து முழுமையாக தான் ஓய்வுப்பெறவில்லை. செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபட்டுள்ளோம். வெற்றியும், தோல்வியும் என்றும் நிலையானதல்ல.2020 ஆம் ஆண்டு பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றிப் பெற்ற  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 2024 ஆம் ஆண்டு படுதோல்வியடைந்தது. அதேபோல் அன்று 3 ஆசனங்களை பெற்ற தேசிய மக்கள் சக்தி இன்று 159 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஆகவே அரசியலில் ஏதும் நடக்கலாம்.ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வுப் பெறவில்லை. இந்த அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் பிரதான நபராக அவர் செயற்படலாம். ஏனெனில் அவரது பொருளாதார கொள்கைகளையே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செயற்படுத்துகிறார்.2022 ஆம் ஆண்டு நாடு வங்குரோத்து நிலையடைந்த போது தனிநபராகவே ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பொறுப்பேற்றார். குறுகிய காலப்பகுதியில் நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டது.பல ஆண்டுகாலமாக வங்குரோத்து நிலையில் உள்ள ஆஜன்டீனா, லெபனான், சிம்பாபே நாடுகள் இன்றும் வங்குரோத்து நிலையில் இருந்து மீளவில்லை என்றார்.

Advertisement

Advertisement

Advertisement