• Nov 24 2024

பொலீசாருக்கு இடையில் முரண்பாடு - இதனால் மக்கள் கடுமையாக பாதிப்பு – சாணக்கியன் குற்றச்சாட்டு..!Samugammedia

Tamil nila / Dec 17th 2023, 7:49 am
image

ஜனாதிபதி மீது உயர்மட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட குரோதங்கள் இருப்பதன் காரணமாக அவர்களிடையே உள்ள முரண்பாடுகளை வைத்து மக்களை வதைக்கும் நிலையேற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறையில் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள 

தமிழ் அரசியல் கைதிகளை நேற்;றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேற்றையதனிம் சென்று பார்வையிட்டார்.

அதன் பின்னiர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 ஜனவரி மாதம் 06ஆம் திகதி உயர்தரப்பரீட்சை எழுதவுள்ள மாணவர் ஒருவரும் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்து தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை சிறைச்சாலைக்கு சென்று சந்தித்தேன்.

கடந்த வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு தினத்தன்று நானும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் ஜனாதிபதியை சந்தித்தபோது மயிலத்தடு பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தோம் அத்துடன் பயங்கரவா தடுப்பு சட்டம் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தோம்.

அந்த நேரத்தில் இது அரசாங்கத்தின் நிலப்பாடு அல்ல பொலிஸாரின் தவறான செயற்பாடுகள்போல் எங்களிடம் ஜனாதிபதி தெரிவித்திருந்தாலும் கூட இது தொடர்பிலும் இன்னும் நடவடிக்கையெடுக்கப்படவில்லை.

நாங்கள் இன்று சிறைச்சாலைக்குள் இருக்கும்போது ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்கவை தொடர்புகொண்டு இது தொடர்பில் பேசியிருந்தேன்.இதன்போது குறித்த உயர்தரம் கற்கும் மாணவனின் விபரத்தை உடனடியாக அனுப்புமாறு கோரியிருந்தார்.

எங்களின் அழுத்தங்கள் காரணமாக உலகநாடுகள்,மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன சமூக வலைத்தளங்கள் ஊடாக இந்த கைதுகளுக்கு எதிராக அதிர்ப்தியை தெரிவித்திருந்தார்கள்.கைதுசெய்யப்பட்டவர்களை பிணையிலாவது விடுதலைசெய்வதற்கான முயற்சிகளை நாங்கள் முன்னெடுத்துவருகின்றோம்.அவர்கள் மீதான வழக்குகளை தள்ளுபடிசெய்து விடுதலைசெய்யப்படும்வரையில் அவர்களுக்கு ஆதரவாக செயற்படுவோம்.

இவர்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு சென்றது 10வீதம் வீதி ஒப்பந்ததிற்கு தரகுப்பணம் வாங்கவோ,அரசாங்கதிடம் சலுகைகளைப்பெற்றுக்கொள்வதற்கோ அல்ல.இந்த மண்ணுக்காக உயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே சென்றிருந்தார்கள்.

இன்று வீதி புனரமைப்பு என்ற பெயரில் பாரிய மோசடிகள் நடக்கின்றது.இன்று பெய்யும் மழைக்கே வீதிகள் கழுவப்பட்டுச்செல்லும் நிலையே காணப்படுகின்றது. 

இவ்வாறு பாரிய மோசடிகள் நடைபெறுகின்றது. இவ்வாறான மோசடிகளினால் அவர்கள் சிறைக்கு செல்லவில்லை.தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றுதான் இன்று சிறையிலிருக்கின்றார்கள்.

மக்களுக்கும் பொறுப்பிருக்கின்றது இவர்களுக்காக நாங்கள் ஒன்றாகநின்று குரல்கொடுக்கவேண்டும் என்று.

நாட்டில் இன்னொரு புறம் பார்த்தால் வேடிக்கையான ஒரு விடயம் கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதி ஆனதின் பிற்பாடு நாட்டில் எவ்வாறு நிலவரம் இருந்தது மீண்டும் நிலவரம் மாறி இருக்கின்றது இப்போது ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் கீழ்.ஏன் இதனை கூறுகின்றேன் என்றால் கோத்தபாய ராஜபக்சே ஜனாதிபதியாக வந்தவுடன் பயங்கரவாத தடுப்புச் சட்டம் மீண்டும் ஒரு ஆயுதமாக எடுக்கப்பட்டது ;.

கோத்தபாய ராஜபக்சே ஜனாதிபதியாக வந்தவுடன் வீடியோ அபிவிருத்தி என்ற போர்வையில் பாரிய மோசடிகள் இடம் பெற்றது அத்தோடு இந்த நாட்டிலே விவசாயிகள் உரம் இல்லாமல் பல பிரச்சினைகள் எதிர் நோக்கினார்கள் இன்று அதே அனைத்து பிரச்சினைகளையும் மக்கள் மனம் கொடுத்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

இன்று விவசாயிகள் பெரும்போக செய்கைக்காண நிதி அதாவது உரத்துக்கான நிதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்னமும் வந்து சேரவில்லை காரணம் புலனருவை மாவட்டத்தை மையமாக வைத்து விவசாய ஆரம்ப திகதியை குறித்து வைத்திருக்கின்றார்கள் இதை மாற்ற கூறினால் அவர்கள் மாற்றுகின்றார்கள் இல்லை இவ்வாறாக விவசாயிகள் மீனவர்கள் கஷ்டப்படுகின்றார்கள்.

அண்மையில் 90 நாட்கள் பூர்த்தியாகிய மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் கஷ்டத்தில் தொடர்ந்தும் இருக்கின்றார்கள் ஆனால் இவ்வாறான மக்கள் கஷ்டத்தை குறிப்பாக வடக்கு கிழக்கில் மக்கள் கஷ்டத்தை எதிர்கொள்ளும் போது மொட்டு கட்சியினுடைய மாநாட்டினை நேற்றைய தினம் பார்க்கக் கூடியதாக இருந்தது.

இன்று ரணில் விக்கிரமசிங்க ஆட்சியிலே முதலாவது மொட்டு கட்சியினுடைய தலைவர்களை மீண்டும் காப்பாற்றுவதற்காக மேடையிலே ஏறி ஒரு கூட்டம் நடத்தும் அளவிற்கு அவர்  இந்த நாட்டுக்கு செய்த விடயம் என்னவென்றால் மீண்டும் இந்த ராஜபக்ஷ குடும்பத்தினை மேடையில் ஒரு கூட்டத்தை நடத்தி தாங்கள் அந்த நாட்டை மீண்டும் கட்டி எழுப்புவோம் என்று சொல்லும் அளவிற்கு இந்த நாட்டை அவர்களுக்கு தேவையான நிலையை உருவாக்கி இருக்கின்றார்களே தவிர மக்களுக்கு நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை ஜனாதிபதியால் உருவாக்க முடியவில்லை இதுதான் உண்மையான விடயம்.

இதில் இன்னும் பல விடயங்களை கூறலாம் ஒரு ஊடக பதிவை பார்த்திருந்தேன் கொழும்பு சுவதாச மைதானத்திற்கு வந்தவர்களின் எண்ணிக்கை 5000 ஆனால் இலங்கை முழுவதும் பேனர் கட்டியுள்ளனர் ஒரு லட்சம் அந்த கட்சியினுடைய செல்வாக்கு அவ்வாறு குறைந்துள்ளது.

பசில் ராஜபக்ஷ கூறுகின்றார் நாங்கள் கடந்த காலத்தில் இருந்தது போல முதுகெலும்பில்லாத அரசாங்கமாக இருக்க மாட்டோம் அவர் யாரை குறிப்பிடுகின்றார் கோத்தபாய ராஜபக்ஷ தாங்களே ஒரு நாட்டை கட்டி எழுப்பி காப்பாற்றுவதற்கு இருக்கும் ஒரே தலைவர் என்று சொல்லும் கோட்டபாய ராஜபக்ஷவைத் தானா அவர்கள் மீண்டும் முதுகெழுப்பில்லாதவர் என்று கூறுகின்றார்கள்.

ரணில் விக்கிரமசிங்கவினுடைய ஆட்சியின் காலப்பகுதியில் இந்த ஊழல் மோசடிகள் செய்த கள்ளர்களுக்கு நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்தவர்களுக்கு பாரிய சுதந்திரமும் பாரிய சலுகைகளும் வழங்கப்படுகின்றது மக்கள் இன்னமும் கஷ்டத்துக்கு தள்ளப்படுகிறார்கள் என்பது தான் உண்மையான விடயம்.

இதிலும் வரி வட் வரியை பார்த்தீர்கள் என்றால் கடந்த காலத்திலேயே பால்மா, பாலோடு சம்பந்தப்பட்ட எந்த பொருட்களுக்கும் வரிகளை ஆனால் இப்பொழுது வரியின் ஊடாக 25 வீதம் வாழ்வாவினுடைய விலையும் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள்.

இந்த நாட்டினை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்தவர்கள் மேடை மேடையாக கூட்டம் நடத்துகின்றார்கள் ஆனால் நாட்டு மக்கள் 25 வீதம் அதிகமாக கொடுத்து பால்மா வாங்கும் நிலையில் தள்ளப்பட்டு இருக்கின்றார்கள்.

மகிந்த ராஜபக்ஷ கூறிய விடயங்களில் இது ஒன்றுதான் நான் இணங்கும் விடயம் ஏனென்றால் இரத்த கரைகள் படாதவர்களுக்கு வழங்க வேண்டும் என்று சொன்னால் அதாவது தனக்கு வழங்க வேண்டாம் என கூறுகின்றார் ஏனென்றால் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது இந்த நாட்டிலேயே அதிகாரம் வராது என்று இரத்தக்கரை படியாதவர் என்றால் யாருடைய கரங்களில் ரத்தக்கரை அதிகமாக உள்ளது என்று பார்த்தால் பிள்ளையானின் கைகளில் அதிகமாக உள்ளது.

அதைவிட மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கரங்களில் உள்ளது ஏனென்றால் இலட்சக்கணக்கான தமிழ் மக்களை கொலை செய்வதற்காக கொத்துக் குண்டுகளாக இருக்கட்டும் பொஷ்பரஸ் குண்டுகள் என பேசப்படுகின்றது சிவில் மக்கள் அதாவது வைத்தியசாலைகளில் பாடசாலைகளில் குண்டு வைத்து மக்களை கொலை செய்த குற்றச்சாட்டுகள் இதைவிட ரத்தக்கரைகள் அவருடைய கையை விட வேறு யாருக்கு இருக்க முடியும்.

இந்த பிரகடனம் வந்து புலம்பெயர் தேசத்தில் வாழும் நமது மக்கள் எத்தனையோ அமைப்புகள் உள்ளது என்று ஒரு அமைப்பு ஒரு பிரகடனத்தை செய்து அவர்கள் கொடுத்திருக்கின்றார்கள் எங்களுக்கும் சம்பந்தன் ஐயாவினுடைய இல்லத்தில் தந்திருந்தார்கள் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து தந்திருந்தார்கள் அவர்கள் தங்களுடைய பாதையிலே ஜனநாயக வழியில் இந்த நாட்டில் நல்ல நல்லிணக்கத்திற்கு சில விடயங்களை முன் வைத்திருக்கின்றார்கள் அதில் இருக்கின்றது.

அந்தப் பிரகடனத்தில் முக்கியமாக சொல்லப்படும் ஒரு விடயம் பொறுப்பு கூறல் விடயம் மற்றது விடயத்திற்கு மகாநாயக்க தேரர்களிடம் அங்கீகாரம் வழங்கப்படுகிறது என்று அந்த குறிப்பில் சொல்லப்பட்டிருக்கின்றது.

இந்த விடயம் தொடர்பாக நான் நினைக்கின்றேன் மக்களுக்கும் எல்லா அமைப்புகளுக்கும் என்பதை விட ஒரு சில இதை வைத்துக்கொண்டு விடயங்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் அவர்களுடைய வெளியே செய்கின்றார்கள் இன்னும் அமைப்புகள் இருந்தால் அவர்களுடைய வேலையை செய்யட்டும் இலங்கையில் இருக்கும் அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் வேலைகளை செய்யட்டும் ஜனநாயக நாட்டிலே ஜனநாயக வழியிலே அனைவருக்கும் தங்களுடைய அரசியலை தங்களுடைய வேலை திட்டங்களை கொண்டு செல்வதற்கு ஜனநாயக சுதந்திரம் இருக்கின்றது அதைப்பற்றி பெரிய அளவில் அலட்டிக் கொள்ள வேண்டியது இல்லை.

மயிலத்தமடு மாதவனை விடயம் தொடர்பாக நாங்கள் கிராம சேவகரிடம் முதலில் பேசினோம் பின்னர் பிரதேச செயலாளரிடம் பேசினோம் பின்னர் மாவட்ட அரசாங்க அதிபருடன் பேசினோம் மாகாணத்திலே அந்த நேரம் இருந்த ஆளுநரிடம் பேசினோம் அதன் பிற்பாடு நீர்ப்பாசன அமைச்சர் அந்த நேரத்திலிருந்து அமல் ராஜபக்ஷிடம் பேசினோம் அதன் பிற்பாடு கோத்தபாய ராஜபக்சவிடம் பேசினோம் அதன் பிற்பாடு தான் நீதிமன்றங்களை நாடினோம்.

நாங்கள் இந்த மயிலதமடு விடயத்தில் எங்களால் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கின்றோம் இந்த அத்துமீறிய விவசாயிகள் வருவதை ஆறாம் மாதம் அளவில் அந்த நிறம் இருந்த ரொசான் ரணசங்கிவிடம் தெரிவித்து இருந்தோம் அவர் கவனம் செலுத்தாமல் இருந்ததற்கான காரணம் அவருக்கு வேண்டப்பட்டவர்கள் அத்துமீறி வருகின்றார்கள் என்று கேள்வி இருந்தது.

ஆனால் ஜனாதிபதி அவர்கள் நான் இருக்கும் போது தான் நான் நினைக்கின்றேன் அந்த கூட்டத்திலே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடைய கட்சியில் அவர்கள் வரவில்லை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளிடம் இடம் பெற்ற கூட்டம் கூட்டத்தில் ஜனாதிபதி கூறினார் அரசியல்வாதிகள் செல்லக்கூடாது பிக்குமார் செல்லக்கூடாது பணியாளர்களும் செல்லக்கூடாது நீங்கள் கூறியது போல அவர்தான் இதனை சூனிய பிரதேசமாக மாற்றியது.

ஏனென்றால் அந்த பிரதேசத்துக்குள்ளே மூன்றாம் நபர்கள் செல்ல முடியாது அதிகாரிகள் மாத்திரம் செல்ல முடியும் பண்ணையாளர்கள் செல்லலாம் விவசாயிகளும் செல்லலாம் அதே போல இதைவிட அதிகமாக வரக்கூடாது என்று சொன்னார்கள் ஆனால் எங்களுடைய மாவட்டத்தில் இருக்கும் ஒரு முட்டாள் அந்த இடத்திலேயே கூறினார் போலீஸ் காவலர்னை போடுங்கள் என்று அவர் தான் கூறினார்.

இந்த போலீஸ் காவலரனை போட்டு அவர்களை கட்டுப்படுத்தலாம் என்று இந்த பிரதேசத்துக்குள்ளே என்று சாதாரண மக்களும் செல்ல முடியாது எமது பண்ணையாளர்களும் நிம்மதியாக செல்ல முடியாது அரசியல்வாதிகளும் செல்ல முடியாது என்றால் இதற்கு காரணம் எமது மாவட்டத்தில் இருக்கும் முட்டாள் அபிவிருத்தி குழு தலைவர் தான்.

நிச்சயமாக என்னை பொருத்தளவில் ஜனாதிபதியினுடைய செயல்பாடுகளை போலீசின் அடிமட்டத்தில் இருக்கும் உறுப்பினர்களை குறை சொல்லவில்லை போலீசில் மேல் அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் ஏ.எஸ்.பி மட்டமல்ல அதற்கு மேல் இருக்கும் உயர் அதிகாரிகள் ஜனாதிபதியுடன் அவர்களுக்கு தனிப்பட்ட குரோதம் இருப்பதாக தெரிகிறது.

ஏனென்றால் சில இடமாற்றங்கள் புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் விடையங்கள் தொடர்பிலே அவர்களுக்கு இருக்கும் முரண்பாடுகளை வைத்து இன்று மக்களை வதைக்கின்றார்கள் மக்களை வதைப்பதன் ஊடாக எங்களை வைத்துக்கொண்டு அரசாங்கத்துக்கு எதிரான சில செயற்பாடுகள் வரும் என்று தெரியும் இது அரசுக்கு ஒரு அவப்பெயர் வரும்.

இன்று பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை போலீசார் நடந்து கொண்ட விதம் இன்று அரசாங்கத்திற்கு பாடிய அழுத்தத்தை சர்வதேச ரீதியாக வந்திருக்கின்றது மயிலத்தமடுவில் ஜனநாயக ரீதியாக எங்களுடைய மக்களுடைய வாழ்வாதாரத்தினை மேற்கொள்ள முடியாமல் இந்த பண்ணையாளர்களை அச்சுறுத்தி கால்நடைகளை கொல்லப்படுவது அரசாங்கத்திற்கு ஒரு பிரச்சனை.

இந்தப் பிரச்சினையை தொடர்ந்து நடப்பது சில போலீசாரம் இருக்கலாம் ஆனால் இதில் இறுதியாக ஜனாதிபதி நான் ஆரம்பத்திலேயே கூறினேன் ஜனாதிபதி சொல்வதை போலீசார் மற்றும் ராணுவத்தினர் நடைமுறைப்படுத்துகின்றார்களா இல்லையா என்கின்ற சந்தேகம் இருக்கின்றது என நான் பாராளுமன்றத்தில் பல காலத்திற்கு முன்னர் கூறியிருந்தேன்.

போலீசாரம் பல முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போலீசார் வேணும் என்று இந்த பிரச்சினைகளை வளர விடுகிறார்கள் என்கின்ற சந்தேகம் இருக்கின்றது - என தெரிவித்தார்.


பொலீசாருக்கு இடையில் முரண்பாடு - இதனால் மக்கள் கடுமையாக பாதிப்பு – சாணக்கியன் குற்றச்சாட்டு.Samugammedia ஜனாதிபதி மீது உயர்மட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட குரோதங்கள் இருப்பதன் காரணமாக அவர்களிடையே உள்ள முரண்பாடுகளை வைத்து மக்களை வதைக்கும் நிலையேற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.மட்டக்களப்பு சிறையில் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேற்;றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேற்றையதனிம் சென்று பார்வையிட்டார்.அதன் பின்னiர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனவரி மாதம் 06ஆம் திகதி உயர்தரப்பரீட்சை எழுதவுள்ள மாணவர் ஒருவரும் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்து தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை சிறைச்சாலைக்கு சென்று சந்தித்தேன்.கடந்த வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு தினத்தன்று நானும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் ஜனாதிபதியை சந்தித்தபோது மயிலத்தடு பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தோம் அத்துடன் பயங்கரவா தடுப்பு சட்டம் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தோம்.அந்த நேரத்தில் இது அரசாங்கத்தின் நிலப்பாடு அல்ல பொலிஸாரின் தவறான செயற்பாடுகள்போல் எங்களிடம் ஜனாதிபதி தெரிவித்திருந்தாலும் கூட இது தொடர்பிலும் இன்னும் நடவடிக்கையெடுக்கப்படவில்லை.நாங்கள் இன்று சிறைச்சாலைக்குள் இருக்கும்போது ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்கவை தொடர்புகொண்டு இது தொடர்பில் பேசியிருந்தேன்.இதன்போது குறித்த உயர்தரம் கற்கும் மாணவனின் விபரத்தை உடனடியாக அனுப்புமாறு கோரியிருந்தார்.எங்களின் அழுத்தங்கள் காரணமாக உலகநாடுகள்,மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன சமூக வலைத்தளங்கள் ஊடாக இந்த கைதுகளுக்கு எதிராக அதிர்ப்தியை தெரிவித்திருந்தார்கள்.கைதுசெய்யப்பட்டவர்களை பிணையிலாவது விடுதலைசெய்வதற்கான முயற்சிகளை நாங்கள் முன்னெடுத்துவருகின்றோம்.அவர்கள் மீதான வழக்குகளை தள்ளுபடிசெய்து விடுதலைசெய்யப்படும்வரையில் அவர்களுக்கு ஆதரவாக செயற்படுவோம்.இவர்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு சென்றது 10வீதம் வீதி ஒப்பந்ததிற்கு தரகுப்பணம் வாங்கவோ,அரசாங்கதிடம் சலுகைகளைப்பெற்றுக்கொள்வதற்கோ அல்ல.இந்த மண்ணுக்காக உயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே சென்றிருந்தார்கள்.இன்று வீதி புனரமைப்பு என்ற பெயரில் பாரிய மோசடிகள் நடக்கின்றது.இன்று பெய்யும் மழைக்கே வீதிகள் கழுவப்பட்டுச்செல்லும் நிலையே காணப்படுகின்றது. இவ்வாறு பாரிய மோசடிகள் நடைபெறுகின்றது. இவ்வாறான மோசடிகளினால் அவர்கள் சிறைக்கு செல்லவில்லை.தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றுதான் இன்று சிறையிலிருக்கின்றார்கள்.மக்களுக்கும் பொறுப்பிருக்கின்றது இவர்களுக்காக நாங்கள் ஒன்றாகநின்று குரல்கொடுக்கவேண்டும் என்று.நாட்டில் இன்னொரு புறம் பார்த்தால் வேடிக்கையான ஒரு விடயம் கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதி ஆனதின் பிற்பாடு நாட்டில் எவ்வாறு நிலவரம் இருந்தது மீண்டும் நிலவரம் மாறி இருக்கின்றது இப்போது ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் கீழ்.ஏன் இதனை கூறுகின்றேன் என்றால் கோத்தபாய ராஜபக்சே ஜனாதிபதியாக வந்தவுடன் பயங்கரவாத தடுப்புச் சட்டம் மீண்டும் ஒரு ஆயுதமாக எடுக்கப்பட்டது ;.கோத்தபாய ராஜபக்சே ஜனாதிபதியாக வந்தவுடன் வீடியோ அபிவிருத்தி என்ற போர்வையில் பாரிய மோசடிகள் இடம் பெற்றது அத்தோடு இந்த நாட்டிலே விவசாயிகள் உரம் இல்லாமல் பல பிரச்சினைகள் எதிர் நோக்கினார்கள் இன்று அதே அனைத்து பிரச்சினைகளையும் மக்கள் மனம் கொடுத்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.இன்று விவசாயிகள் பெரும்போக செய்கைக்காண நிதி அதாவது உரத்துக்கான நிதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்னமும் வந்து சேரவில்லை காரணம் புலனருவை மாவட்டத்தை மையமாக வைத்து விவசாய ஆரம்ப திகதியை குறித்து வைத்திருக்கின்றார்கள் இதை மாற்ற கூறினால் அவர்கள் மாற்றுகின்றார்கள் இல்லை இவ்வாறாக விவசாயிகள் மீனவர்கள் கஷ்டப்படுகின்றார்கள்.அண்மையில் 90 நாட்கள் பூர்த்தியாகிய மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் கஷ்டத்தில் தொடர்ந்தும் இருக்கின்றார்கள் ஆனால் இவ்வாறான மக்கள் கஷ்டத்தை குறிப்பாக வடக்கு கிழக்கில் மக்கள் கஷ்டத்தை எதிர்கொள்ளும் போது மொட்டு கட்சியினுடைய மாநாட்டினை நேற்றைய தினம் பார்க்கக் கூடியதாக இருந்தது.இன்று ரணில் விக்கிரமசிங்க ஆட்சியிலே முதலாவது மொட்டு கட்சியினுடைய தலைவர்களை மீண்டும் காப்பாற்றுவதற்காக மேடையிலே ஏறி ஒரு கூட்டம் நடத்தும் அளவிற்கு அவர்  இந்த நாட்டுக்கு செய்த விடயம் என்னவென்றால் மீண்டும் இந்த ராஜபக்ஷ குடும்பத்தினை மேடையில் ஒரு கூட்டத்தை நடத்தி தாங்கள் அந்த நாட்டை மீண்டும் கட்டி எழுப்புவோம் என்று சொல்லும் அளவிற்கு இந்த நாட்டை அவர்களுக்கு தேவையான நிலையை உருவாக்கி இருக்கின்றார்களே தவிர மக்களுக்கு நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை ஜனாதிபதியால் உருவாக்க முடியவில்லை இதுதான் உண்மையான விடயம்.இதில் இன்னும் பல விடயங்களை கூறலாம் ஒரு ஊடக பதிவை பார்த்திருந்தேன் கொழும்பு சுவதாச மைதானத்திற்கு வந்தவர்களின் எண்ணிக்கை 5000 ஆனால் இலங்கை முழுவதும் பேனர் கட்டியுள்ளனர் ஒரு லட்சம் அந்த கட்சியினுடைய செல்வாக்கு அவ்வாறு குறைந்துள்ளது.பசில் ராஜபக்ஷ கூறுகின்றார் நாங்கள் கடந்த காலத்தில் இருந்தது போல முதுகெலும்பில்லாத அரசாங்கமாக இருக்க மாட்டோம் அவர் யாரை குறிப்பிடுகின்றார் கோத்தபாய ராஜபக்ஷ தாங்களே ஒரு நாட்டை கட்டி எழுப்பி காப்பாற்றுவதற்கு இருக்கும் ஒரே தலைவர் என்று சொல்லும் கோட்டபாய ராஜபக்ஷவைத் தானா அவர்கள் மீண்டும் முதுகெழுப்பில்லாதவர் என்று கூறுகின்றார்கள்.ரணில் விக்கிரமசிங்கவினுடைய ஆட்சியின் காலப்பகுதியில் இந்த ஊழல் மோசடிகள் செய்த கள்ளர்களுக்கு நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்தவர்களுக்கு பாரிய சுதந்திரமும் பாரிய சலுகைகளும் வழங்கப்படுகின்றது மக்கள் இன்னமும் கஷ்டத்துக்கு தள்ளப்படுகிறார்கள் என்பது தான் உண்மையான விடயம்.இதிலும் வரி வட் வரியை பார்த்தீர்கள் என்றால் கடந்த காலத்திலேயே பால்மா, பாலோடு சம்பந்தப்பட்ட எந்த பொருட்களுக்கும் வரிகளை ஆனால் இப்பொழுது வரியின் ஊடாக 25 வீதம் வாழ்வாவினுடைய விலையும் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள்.இந்த நாட்டினை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்தவர்கள் மேடை மேடையாக கூட்டம் நடத்துகின்றார்கள் ஆனால் நாட்டு மக்கள் 25 வீதம் அதிகமாக கொடுத்து பால்மா வாங்கும் நிலையில் தள்ளப்பட்டு இருக்கின்றார்கள்.மகிந்த ராஜபக்ஷ கூறிய விடயங்களில் இது ஒன்றுதான் நான் இணங்கும் விடயம் ஏனென்றால் இரத்த கரைகள் படாதவர்களுக்கு வழங்க வேண்டும் என்று சொன்னால் அதாவது தனக்கு வழங்க வேண்டாம் என கூறுகின்றார் ஏனென்றால் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது இந்த நாட்டிலேயே அதிகாரம் வராது என்று இரத்தக்கரை படியாதவர் என்றால் யாருடைய கரங்களில் ரத்தக்கரை அதிகமாக உள்ளது என்று பார்த்தால் பிள்ளையானின் கைகளில் அதிகமாக உள்ளது.அதைவிட மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கரங்களில் உள்ளது ஏனென்றால் இலட்சக்கணக்கான தமிழ் மக்களை கொலை செய்வதற்காக கொத்துக் குண்டுகளாக இருக்கட்டும் பொஷ்பரஸ் குண்டுகள் என பேசப்படுகின்றது சிவில் மக்கள் அதாவது வைத்தியசாலைகளில் பாடசாலைகளில் குண்டு வைத்து மக்களை கொலை செய்த குற்றச்சாட்டுகள் இதைவிட ரத்தக்கரைகள் அவருடைய கையை விட வேறு யாருக்கு இருக்க முடியும்.இந்த பிரகடனம் வந்து புலம்பெயர் தேசத்தில் வாழும் நமது மக்கள் எத்தனையோ அமைப்புகள் உள்ளது என்று ஒரு அமைப்பு ஒரு பிரகடனத்தை செய்து அவர்கள் கொடுத்திருக்கின்றார்கள் எங்களுக்கும் சம்பந்தன் ஐயாவினுடைய இல்லத்தில் தந்திருந்தார்கள் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து தந்திருந்தார்கள் அவர்கள் தங்களுடைய பாதையிலே ஜனநாயக வழியில் இந்த நாட்டில் நல்ல நல்லிணக்கத்திற்கு சில விடயங்களை முன் வைத்திருக்கின்றார்கள் அதில் இருக்கின்றது.அந்தப் பிரகடனத்தில் முக்கியமாக சொல்லப்படும் ஒரு விடயம் பொறுப்பு கூறல் விடயம் மற்றது விடயத்திற்கு மகாநாயக்க தேரர்களிடம் அங்கீகாரம் வழங்கப்படுகிறது என்று அந்த குறிப்பில் சொல்லப்பட்டிருக்கின்றது.இந்த விடயம் தொடர்பாக நான் நினைக்கின்றேன் மக்களுக்கும் எல்லா அமைப்புகளுக்கும் என்பதை விட ஒரு சில இதை வைத்துக்கொண்டு விடயங்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் அவர்களுடைய வெளியே செய்கின்றார்கள் இன்னும் அமைப்புகள் இருந்தால் அவர்களுடைய வேலையை செய்யட்டும் இலங்கையில் இருக்கும் அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் வேலைகளை செய்யட்டும் ஜனநாயக நாட்டிலே ஜனநாயக வழியிலே அனைவருக்கும் தங்களுடைய அரசியலை தங்களுடைய வேலை திட்டங்களை கொண்டு செல்வதற்கு ஜனநாயக சுதந்திரம் இருக்கின்றது அதைப்பற்றி பெரிய அளவில் அலட்டிக் கொள்ள வேண்டியது இல்லை.மயிலத்தமடு மாதவனை விடயம் தொடர்பாக நாங்கள் கிராம சேவகரிடம் முதலில் பேசினோம் பின்னர் பிரதேச செயலாளரிடம் பேசினோம் பின்னர் மாவட்ட அரசாங்க அதிபருடன் பேசினோம் மாகாணத்திலே அந்த நேரம் இருந்த ஆளுநரிடம் பேசினோம் அதன் பிற்பாடு நீர்ப்பாசன அமைச்சர் அந்த நேரத்திலிருந்து அமல் ராஜபக்ஷிடம் பேசினோம் அதன் பிற்பாடு கோத்தபாய ராஜபக்சவிடம் பேசினோம் அதன் பிற்பாடு தான் நீதிமன்றங்களை நாடினோம்.நாங்கள் இந்த மயிலதமடு விடயத்தில் எங்களால் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கின்றோம் இந்த அத்துமீறிய விவசாயிகள் வருவதை ஆறாம் மாதம் அளவில் அந்த நிறம் இருந்த ரொசான் ரணசங்கிவிடம் தெரிவித்து இருந்தோம் அவர் கவனம் செலுத்தாமல் இருந்ததற்கான காரணம் அவருக்கு வேண்டப்பட்டவர்கள் அத்துமீறி வருகின்றார்கள் என்று கேள்வி இருந்தது.ஆனால் ஜனாதிபதி அவர்கள் நான் இருக்கும் போது தான் நான் நினைக்கின்றேன் அந்த கூட்டத்திலே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடைய கட்சியில் அவர்கள் வரவில்லை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளிடம் இடம் பெற்ற கூட்டம் கூட்டத்தில் ஜனாதிபதி கூறினார் அரசியல்வாதிகள் செல்லக்கூடாது பிக்குமார் செல்லக்கூடாது பணியாளர்களும் செல்லக்கூடாது நீங்கள் கூறியது போல அவர்தான் இதனை சூனிய பிரதேசமாக மாற்றியது.ஏனென்றால் அந்த பிரதேசத்துக்குள்ளே மூன்றாம் நபர்கள் செல்ல முடியாது அதிகாரிகள் மாத்திரம் செல்ல முடியும் பண்ணையாளர்கள் செல்லலாம் விவசாயிகளும் செல்லலாம் அதே போல இதைவிட அதிகமாக வரக்கூடாது என்று சொன்னார்கள் ஆனால் எங்களுடைய மாவட்டத்தில் இருக்கும் ஒரு முட்டாள் அந்த இடத்திலேயே கூறினார் போலீஸ் காவலர்னை போடுங்கள் என்று அவர் தான் கூறினார்.இந்த போலீஸ் காவலரனை போட்டு அவர்களை கட்டுப்படுத்தலாம் என்று இந்த பிரதேசத்துக்குள்ளே என்று சாதாரண மக்களும் செல்ல முடியாது எமது பண்ணையாளர்களும் நிம்மதியாக செல்ல முடியாது அரசியல்வாதிகளும் செல்ல முடியாது என்றால் இதற்கு காரணம் எமது மாவட்டத்தில் இருக்கும் முட்டாள் அபிவிருத்தி குழு தலைவர் தான்.நிச்சயமாக என்னை பொருத்தளவில் ஜனாதிபதியினுடைய செயல்பாடுகளை போலீசின் அடிமட்டத்தில் இருக்கும் உறுப்பினர்களை குறை சொல்லவில்லை போலீசில் மேல் அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் ஏ.எஸ்.பி மட்டமல்ல அதற்கு மேல் இருக்கும் உயர் அதிகாரிகள் ஜனாதிபதியுடன் அவர்களுக்கு தனிப்பட்ட குரோதம் இருப்பதாக தெரிகிறது.ஏனென்றால் சில இடமாற்றங்கள் புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் விடையங்கள் தொடர்பிலே அவர்களுக்கு இருக்கும் முரண்பாடுகளை வைத்து இன்று மக்களை வதைக்கின்றார்கள் மக்களை வதைப்பதன் ஊடாக எங்களை வைத்துக்கொண்டு அரசாங்கத்துக்கு எதிரான சில செயற்பாடுகள் வரும் என்று தெரியும் இது அரசுக்கு ஒரு அவப்பெயர் வரும்.இன்று பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை போலீசார் நடந்து கொண்ட விதம் இன்று அரசாங்கத்திற்கு பாடிய அழுத்தத்தை சர்வதேச ரீதியாக வந்திருக்கின்றது மயிலத்தமடுவில் ஜனநாயக ரீதியாக எங்களுடைய மக்களுடைய வாழ்வாதாரத்தினை மேற்கொள்ள முடியாமல் இந்த பண்ணையாளர்களை அச்சுறுத்தி கால்நடைகளை கொல்லப்படுவது அரசாங்கத்திற்கு ஒரு பிரச்சனை.இந்தப் பிரச்சினையை தொடர்ந்து நடப்பது சில போலீசாரம் இருக்கலாம் ஆனால் இதில் இறுதியாக ஜனாதிபதி நான் ஆரம்பத்திலேயே கூறினேன் ஜனாதிபதி சொல்வதை போலீசார் மற்றும் ராணுவத்தினர் நடைமுறைப்படுத்துகின்றார்களா இல்லையா என்கின்ற சந்தேகம் இருக்கின்றது என நான் பாராளுமன்றத்தில் பல காலத்திற்கு முன்னர் கூறியிருந்தேன்.போலீசாரம் பல முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போலீசார் வேணும் என்று இந்த பிரச்சினைகளை வளர விடுகிறார்கள் என்கின்ற சந்தேகம் இருக்கின்றது - என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement