• Mar 31 2025

இந்தியாவிடம் மீண்டும் ஆயுதம் கேட்ட சாணக்கியன் எம்.பி..!

Chithra / Jan 12th 2024, 8:20 am
image


1980 களில், இலங்கைத் தமிழர்கள் தமிழக அரசிடம் ஆயுதங்களைக் கோரியதாகம் அதற்கு தமிழக அரசு உதவியதாகவும், இப்போது தமிழக அரசிடம் ஆயுதம் கேட்கிறேன், பொருளாதார ஆதரவே, அந்த ஆயுதம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சென்னையில் நேற்றையதினம் (11) ஆரம்பமான 2024ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர் தினத்தின்  முதல் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும்  கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது  தமிழக மாநில அரசு செய்த உதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் நெருக்கடியான நேரத்தில் தமிழக அரசு நிவாரணப் பொருட்களை அனுப்பியது, பெருமையான தருணம், 

ஏனெனில் நிவாரணப் பொருட்கள் தமிழர்களுக்குமட்டுமல்ல, 

அனைத்து இலங்கையர்களுக்கும் அனுப்பப்பட்டது என்று சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிடம் மீண்டும் ஆயுதம் கேட்ட சாணக்கியன் எம்.பி. 1980 களில், இலங்கைத் தமிழர்கள் தமிழக அரசிடம் ஆயுதங்களைக் கோரியதாகம் அதற்கு தமிழக அரசு உதவியதாகவும், இப்போது தமிழக அரசிடம் ஆயுதம் கேட்கிறேன், பொருளாதார ஆதரவே, அந்த ஆயுதம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் சென்னையில் நேற்றையதினம் (11) ஆரம்பமான 2024ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர் தினத்தின்  முதல் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.மேலும்  கருத்து தெரிவித்த அவர்,இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது  தமிழக மாநில அரசு செய்த உதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.மேலும் நெருக்கடியான நேரத்தில் தமிழக அரசு நிவாரணப் பொருட்களை அனுப்பியது, பெருமையான தருணம், ஏனெனில் நிவாரணப் பொருட்கள் தமிழர்களுக்குமட்டுமல்ல, அனைத்து இலங்கையர்களுக்கும் அனுப்பப்பட்டது என்று சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement