• Nov 26 2024

இலங்கை தமிழரசுக்கட்சியை அழிக்க சதித்திட்டம் –சாணக்கியன் எச்சரிக்கை!

Tamil nila / Oct 13th 2024, 10:31 pm
image

இலங்கை தமிழரசுக்கட்சியை உடைக்கவேண்டும்,கட்சியை இல்லாமல்செய்யவேண்டும் என புலம்பெயர் நாடுகளில் உள்ள சில பிரதான தொழிலதிபர்கள்,வர்த்தகர்கள் சில சதிகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இரா.சாணக்கியனுக்கும் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்,இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி கிளைகளின் முக்கிய உறுப்பினர்களுக்கான சந்திப்பு இன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன்,இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி க.ரஞ்சனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இலங்கை பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவது குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன் அது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இதன்போது கருத்து தெரிவித்த சாணக்கியன் எம்.பி.,



மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வெற்றியானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்றுவாழவேண்டும்,அதேபோன்று இந்த நாட்டில் நிகழ்த்தப்பட்ட மீறல்கள்,இனப்படுகொலைக்கு நீதிவேண்டும்ஆகிய கோரிக்கைளை நாங்கள் கடந்த காலத்தில் முன்வைத்து தொடர்ந்து அதனை முன்னிறுத்திவருகின்றோம்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைக்கோரக்கூடிய கட்சி இலங்கை தமிழரசுக்கட்சி மட்டுமேயாகும்.ஏனைய கட்சிகள் அழுத்தங்களை வழங்கினாலும் பிரதான விடயங்களை நாங்கள்தான் முன்னெடுத்திருந்தோம்.கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் களமிறங்கிபோது இதற்கான தீர்வுகளை பெறலாம் என நினைத்திருந்தோம். துரதிர்ஸ்டவசமான கோத்தபாய ராஜபக்ஸவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்திருந்தது.அவ்வாறான சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வுதிட்டத்தினை முன்னிறுத்தகூடிய சூழல் அமையவில்லை.

கடந்த நான்கு வருடமாக அதிதீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளியைப்போலவே தமிழ் இனம் இருந்துவந்தது.தவறான ஊசிகளை செலுத்தி அந்த நோயாளியை அழித்துவிடவேண்டும் என்ற வகையிலேயே கோத்தபாயவின் ஆட்சியிருந்தது.பல இடங்களில் அத்துமீறிய குடியேற்றங்களை முன்னெடுத்தார்.தொல் பொருள் என்ற போர்வையில் புதிதாக விகாரைகளை அமைப்பதற்கு முயற்சிகளை முன்னெடுத்தார்.

கோத்தபாய ராஜபக்ஸ எமது இனத்திற்கு செய்த துரோகத்திற்காக அவரை தெரிவுசெய்த அதே மக்கள் இரண்டு வருடங்களில் வீதிகளிலிறங்கி துரத்தியடித்தனர்.

கோத்தபாய ராஜபகஸதான் பேரினவாத சிந்தனைகொண்டவர்,தமிழர்களை கொன்றுகுவித்தவர்கள் அவர் அவ்வாறுதான் நடந்துகொள்வார்கள் என்றால் தமிழ் மக்களின் வாக்குகளினால் வெற்றிபெற்றவர் இருவர் இந்த மாவட்டத்தில் ஒருவர் விரைவில் சிறைக்கு செல்வார்.புதிய அரசாங்கத்தில் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத்தின் வழக்கினை மீள ஆரம்பிக்கப்போகின்றார்கள்,உயிர்த்த ஞாயிறு வழக்கினை மீள ஆரம்பிக்கப்போகின்றார்கள்.நிச்சயமாக அவர் சிறைக்கு செல்வார்.

இங்கு இருந்த இராஜாங்க அமைச்சர்கள் மண் கடத்துவதினையும் குளங்களை அமைப்பதற்கு பதிலாக மண் எடுத்து குளங்களை உருவாக்கினார்கள்.அதனை நாங்களே தடுத்து நிறுத்தினோம்.வாகரையில் இரால் வளர்ப்பு திட்டம் என்றும் இல்மனைட் அகழ்வு என்றும் மக்களின் வாழ்வாதாரத்தில் கைவைக்கும் நிலைமைகள் காணப்பட்டது.

புளுட்டுமானோடையில் சந்திகாந்தன்,பிரசாந்தன் ஆகியோரது குடும்ப உறுப்பினர்களுக்கு காணிகள் வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டது.இவ்வாறு இந்த மாவட்டங்களில் உள்ள வளங்களை தங்களுக்கும் தங்களது ஆதரவாளர்களுக்கும் குடும்பங்களுக்கும் அபகரிக்கும் வேலைத்திட்டமே இங்கு முன்னெடுக்கப்பட்டது.இந்த மாவட்டங்களில் உள்ள வளங்களை இவ்வாறான கள்வர்களிடமிருந்து காப்பாற்றவேண்டிய பொறுப்பும் எங்களுக்குத்தான் இருந்தது.

இதேபோன்று புதிய அரசாங்கத்துடன் பேசி எதிர்வரும் காலத்தில் மிகுதியாகவுள்ள அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

இந்தப் பிரதேச மக்கள் அன்றாடம் அனுபவித்த பிரச்சினைகளுக்காக நாங்கள் தான் குரல் கொடுத்தோம். மின்சாரக் கட்டணம் அதிகரித்த நேரத்திலே கோட்டைக்கல்லாறு, பெரிய கல்லாறு பாலத்திலே தீப்பந்தப் போராட்டம் நடத்தினோம். விலைவாசிகளை குறைக்க வேண்டும் என்று நாங்கள்தான் போராட்டம் நடத்தினோம்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு பயணிக்கின்ற புலஸ்தி எனப்படுகின்ற புகையிரதமானது ஆரம்பத்தில் பொலன்னறுவை மாவட்டம் மட்டுமே பயணத்தில் ஈடுபட்டது. அந்தப் புகையிரதம் மட்டக்களப்பு வரை பயணிக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி நான் தான் அதனை மட்டக்களப்பிற்கு கொண்டு வந்தேன். நான் அபிவிருத்தித் திட்டங்கள் எதையும் செய்யவில்லை என்று கூறுகின்றார்கள். மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற பதவியையும் சில அரச அதிகாரிகளையும் வைத்துக்கொண்டு மக்களுக்கு வரவேண்டிய நிதிகளை இல்லாமல் செய்தனர். அந்த அரச அதிகாரிகளுக்கு இனிவரும் அரசாங்கத்தில் நிச்சயம் தண்டனைகள் வழங்கப்படும்.

இங்கு அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட எத்தனையோ கிலோமீற்றர் கணக்கான வீதிகள் மீண்டும் மத்திய அரசாங்கத்தினால் மீளப்பெறப்பட்டது. ஏனென்றால் சாணக்கியன் சொல்லி அந்த வீதிகள் புனரமைக்கப்பட்டால் மக்கள் சாணக்கியனோடு நிற்பார்கள் என்பதாலாகும். 2020,2021,2022,2023 ஆம் ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதிகூட எனக்கு வழங்கப்படவில்லை. 

மட்டக்களப்பிலுள்ள ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களிலே பிள்ளையானுக்கு ஐந்து கோடி, வியாழேந்திரன் அவர்களுக்கு 5கோடி, நஸீர் அகமட் அவர்களுக்கு 5கோடி, ஜனா அண்ணணுக்கு 5கோடி பிள்ளையானால் வழங்கப்பட்டது. எனக்கு வழங்கப்படவேண்டிய 5கோடி அதாவுல்லாவிற்கு வழங்கப்பட்டது. அதுபற்றி நான் விளக்கம் கேட்டபோது அதாவுல்லா அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் என்பதால் அவருக்கு வழங்கப்பட்டதாக கூறினார்கள்.

வெளியில்  பேசுவதெல்லாம் முஸ்லிம் விரோதம், முஸ்லிம்களை நாங்கள் அகற்றப்போகின்றோம் என்பதாகும். ஆனால் நஸீர் அகமட் அவர்களுக்கு, அதாவுல்லாவிற்கு ஐந்துகோடி, தமிழ்த் தேசியத் தரப்பிலே அரசியல் செய்கின்ற எனக்கில்லை ஆனால் ஜனா அண்ணணுக்கு 5கோடி வழங்கப்பட்டிருக்கின்றது. அவர்களுக்குள் ஏதும் ஒப்பந்தம் இருக்கின்றதாவென எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு நிதி வழங்கப்படவில்லை. 

பின்னர் நான் ஜனாதிபதியை சந்தித்து அவருடன் சண்டை பிடித்து ஐந்து கோடி நிதியை கொண்டு வந்தேன். அதனைத் தொடர்ந்து 60கோடி ரூபா நிதியை ஆறுமாத காலத்தினுள் இந்த மாவட்டத்திற்காக கொண்டு வந்தோம். அதனைக்கொண்டு இந்த மாவட்டத்தில் எங்களிடம் கோரப்பட்ட அனைத்து வேலைத்திட்டங்களையும் செய்து முடித்திருந்தோம்.

அமைச்சர்களாகிய எங்களுக்கே 35கோடி நிதி தான் ஒதுக்கப்படுகின்றது, சாணக்கியனுக்கு எவ்வாறு நீங்கள் 60கோடியை ஒதுக்கலாம் என்று கூறி 60கோடியில் 20கோடியை எங்களுக்கு கிடைக்காமல் செய்துவிட்டார்கள். இதனால் சில கிராமங்களுக்கான நிதிகள் வெட்டப்பட்டன. அமைச்சர்கள் மூன்று வருடங்களாக செய்யாத சில விடயங்களை வெறும் மூன்று மாதங்களில் நான் செய்துகாட்டியிருக்கின்றேன். 

அரசாங்கம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி, விமர்சித்து,தட்டிக்கேட்டு, பிழையான அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தித்தான் இந்த வேலைத்திட்டங்களை செய்திருக்கின்றோம். என்றார்.

இலங்கை தமிழரசுக்கட்சியை அழிக்க சதித்திட்டம் –சாணக்கியன் எச்சரிக்கை இலங்கை தமிழரசுக்கட்சியை உடைக்கவேண்டும்,கட்சியை இல்லாமல்செய்யவேண்டும் என புலம்பெயர் நாடுகளில் உள்ள சில பிரதான தொழிலதிபர்கள்,வர்த்தகர்கள் சில சதிகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இரா.சாணக்கியனுக்கும் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்,இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி கிளைகளின் முக்கிய உறுப்பினர்களுக்கான சந்திப்பு இன்று நடைபெற்றது.இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன்,இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி க.ரஞ்சனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதன்போது இலங்கை பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவது குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன் அது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இதன்போது கருத்து தெரிவித்த சாணக்கியன் எம்.பி.,மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வெற்றியானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நாட்டில் தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்றுவாழவேண்டும்,அதேபோன்று இந்த நாட்டில் நிகழ்த்தப்பட்ட மீறல்கள்,இனப்படுகொலைக்கு நீதிவேண்டும்ஆகிய கோரிக்கைளை நாங்கள் கடந்த காலத்தில் முன்வைத்து தொடர்ந்து அதனை முன்னிறுத்திவருகின்றோம்.தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைக்கோரக்கூடிய கட்சி இலங்கை தமிழரசுக்கட்சி மட்டுமேயாகும்.ஏனைய கட்சிகள் அழுத்தங்களை வழங்கினாலும் பிரதான விடயங்களை நாங்கள்தான் முன்னெடுத்திருந்தோம்.கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் களமிறங்கிபோது இதற்கான தீர்வுகளை பெறலாம் என நினைத்திருந்தோம். துரதிர்ஸ்டவசமான கோத்தபாய ராஜபக்ஸவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்திருந்தது.அவ்வாறான சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வுதிட்டத்தினை முன்னிறுத்தகூடிய சூழல் அமையவில்லை.கடந்த நான்கு வருடமாக அதிதீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளியைப்போலவே தமிழ் இனம் இருந்துவந்தது.தவறான ஊசிகளை செலுத்தி அந்த நோயாளியை அழித்துவிடவேண்டும் என்ற வகையிலேயே கோத்தபாயவின் ஆட்சியிருந்தது.பல இடங்களில் அத்துமீறிய குடியேற்றங்களை முன்னெடுத்தார்.தொல் பொருள் என்ற போர்வையில் புதிதாக விகாரைகளை அமைப்பதற்கு முயற்சிகளை முன்னெடுத்தார்.கோத்தபாய ராஜபக்ஸ எமது இனத்திற்கு செய்த துரோகத்திற்காக அவரை தெரிவுசெய்த அதே மக்கள் இரண்டு வருடங்களில் வீதிகளிலிறங்கி துரத்தியடித்தனர்.கோத்தபாய ராஜபகஸதான் பேரினவாத சிந்தனைகொண்டவர்,தமிழர்களை கொன்றுகுவித்தவர்கள் அவர் அவ்வாறுதான் நடந்துகொள்வார்கள் என்றால் தமிழ் மக்களின் வாக்குகளினால் வெற்றிபெற்றவர் இருவர் இந்த மாவட்டத்தில் ஒருவர் விரைவில் சிறைக்கு செல்வார்.புதிய அரசாங்கத்தில் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத்தின் வழக்கினை மீள ஆரம்பிக்கப்போகின்றார்கள்,உயிர்த்த ஞாயிறு வழக்கினை மீள ஆரம்பிக்கப்போகின்றார்கள்.நிச்சயமாக அவர் சிறைக்கு செல்வார்.இங்கு இருந்த இராஜாங்க அமைச்சர்கள் மண் கடத்துவதினையும் குளங்களை அமைப்பதற்கு பதிலாக மண் எடுத்து குளங்களை உருவாக்கினார்கள்.அதனை நாங்களே தடுத்து நிறுத்தினோம்.வாகரையில் இரால் வளர்ப்பு திட்டம் என்றும் இல்மனைட் அகழ்வு என்றும் மக்களின் வாழ்வாதாரத்தில் கைவைக்கும் நிலைமைகள் காணப்பட்டது.புளுட்டுமானோடையில் சந்திகாந்தன்,பிரசாந்தன் ஆகியோரது குடும்ப உறுப்பினர்களுக்கு காணிகள் வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டது.இவ்வாறு இந்த மாவட்டங்களில் உள்ள வளங்களை தங்களுக்கும் தங்களது ஆதரவாளர்களுக்கும் குடும்பங்களுக்கும் அபகரிக்கும் வேலைத்திட்டமே இங்கு முன்னெடுக்கப்பட்டது.இந்த மாவட்டங்களில் உள்ள வளங்களை இவ்வாறான கள்வர்களிடமிருந்து காப்பாற்றவேண்டிய பொறுப்பும் எங்களுக்குத்தான் இருந்தது.இதேபோன்று புதிய அரசாங்கத்துடன் பேசி எதிர்வரும் காலத்தில் மிகுதியாகவுள்ள அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.இந்தப் பிரதேச மக்கள் அன்றாடம் அனுபவித்த பிரச்சினைகளுக்காக நாங்கள் தான் குரல் கொடுத்தோம். மின்சாரக் கட்டணம் அதிகரித்த நேரத்திலே கோட்டைக்கல்லாறு, பெரிய கல்லாறு பாலத்திலே தீப்பந்தப் போராட்டம் நடத்தினோம். விலைவாசிகளை குறைக்க வேண்டும் என்று நாங்கள்தான் போராட்டம் நடத்தினோம்.கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு பயணிக்கின்ற புலஸ்தி எனப்படுகின்ற புகையிரதமானது ஆரம்பத்தில் பொலன்னறுவை மாவட்டம் மட்டுமே பயணத்தில் ஈடுபட்டது. அந்தப் புகையிரதம் மட்டக்களப்பு வரை பயணிக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி நான் தான் அதனை மட்டக்களப்பிற்கு கொண்டு வந்தேன். நான் அபிவிருத்தித் திட்டங்கள் எதையும் செய்யவில்லை என்று கூறுகின்றார்கள். மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற பதவியையும் சில அரச அதிகாரிகளையும் வைத்துக்கொண்டு மக்களுக்கு வரவேண்டிய நிதிகளை இல்லாமல் செய்தனர். அந்த அரச அதிகாரிகளுக்கு இனிவரும் அரசாங்கத்தில் நிச்சயம் தண்டனைகள் வழங்கப்படும்.இங்கு அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட எத்தனையோ கிலோமீற்றர் கணக்கான வீதிகள் மீண்டும் மத்திய அரசாங்கத்தினால் மீளப்பெறப்பட்டது. ஏனென்றால் சாணக்கியன் சொல்லி அந்த வீதிகள் புனரமைக்கப்பட்டால் மக்கள் சாணக்கியனோடு நிற்பார்கள் என்பதாலாகும். 2020,2021,2022,2023 ஆம் ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதிகூட எனக்கு வழங்கப்படவில்லை. மட்டக்களப்பிலுள்ள ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களிலே பிள்ளையானுக்கு ஐந்து கோடி, வியாழேந்திரன் அவர்களுக்கு 5கோடி, நஸீர் அகமட் அவர்களுக்கு 5கோடி, ஜனா அண்ணணுக்கு 5கோடி பிள்ளையானால் வழங்கப்பட்டது. எனக்கு வழங்கப்படவேண்டிய 5கோடி அதாவுல்லாவிற்கு வழங்கப்பட்டது. அதுபற்றி நான் விளக்கம் கேட்டபோது அதாவுல்லா அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் என்பதால் அவருக்கு வழங்கப்பட்டதாக கூறினார்கள்.வெளியில்  பேசுவதெல்லாம் முஸ்லிம் விரோதம், முஸ்லிம்களை நாங்கள் அகற்றப்போகின்றோம் என்பதாகும். ஆனால் நஸீர் அகமட் அவர்களுக்கு, அதாவுல்லாவிற்கு ஐந்துகோடி, தமிழ்த் தேசியத் தரப்பிலே அரசியல் செய்கின்ற எனக்கில்லை ஆனால் ஜனா அண்ணணுக்கு 5கோடி வழங்கப்பட்டிருக்கின்றது. அவர்களுக்குள் ஏதும் ஒப்பந்தம் இருக்கின்றதாவென எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு நிதி வழங்கப்படவில்லை. பின்னர் நான் ஜனாதிபதியை சந்தித்து அவருடன் சண்டை பிடித்து ஐந்து கோடி நிதியை கொண்டு வந்தேன். அதனைத் தொடர்ந்து 60கோடி ரூபா நிதியை ஆறுமாத காலத்தினுள் இந்த மாவட்டத்திற்காக கொண்டு வந்தோம். அதனைக்கொண்டு இந்த மாவட்டத்தில் எங்களிடம் கோரப்பட்ட அனைத்து வேலைத்திட்டங்களையும் செய்து முடித்திருந்தோம்.அமைச்சர்களாகிய எங்களுக்கே 35கோடி நிதி தான் ஒதுக்கப்படுகின்றது, சாணக்கியனுக்கு எவ்வாறு நீங்கள் 60கோடியை ஒதுக்கலாம் என்று கூறி 60கோடியில் 20கோடியை எங்களுக்கு கிடைக்காமல் செய்துவிட்டார்கள். இதனால் சில கிராமங்களுக்கான நிதிகள் வெட்டப்பட்டன. அமைச்சர்கள் மூன்று வருடங்களாக செய்யாத சில விடயங்களை வெறும் மூன்று மாதங்களில் நான் செய்துகாட்டியிருக்கின்றேன். அரசாங்கம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி, விமர்சித்து,தட்டிக்கேட்டு, பிழையான அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தித்தான் இந்த வேலைத்திட்டங்களை செய்திருக்கின்றோம். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement