அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் மீதான விசேட வர்த்தகப் பண்ட வரியைக் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் நெத்தலி, மாசி மற்றும் உலர்ந்த மிளகாய் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், இந்த வரித் திருத்தங்கள் இன்று (13) முதல் நடைமுறைக்கு வருகின்றன.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நேற்று (12) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுர குமார திஸாநாயக்க, இந்த வரிக் குறைப்புகள் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அறிவித்திருந்தார்.
இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் நெத்தலி ஒரு கிலோகிராமுக்கு விதிக்கப்பட்டிருந்த 100 ரூபா விசேட வர்த்தகப் பண்ட வரி 10 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, மாசி ஒரு கிலோகிராமுக்கு விதிக்கப்பட்டிருந்த 302 ரூபா வரி 10 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், தூளாக்கப்பட்ட மற்றும் தூளாக்கப்படாத உலர்ந்த மிளகாய் ஒரு கிலோகிராமுக்கு விதிக்கப்படும் விசேட வர்த்தகப் பண்ட வரி 50 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பினால் நுகர்வோர் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த வரிக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த வரித் திருத்தங்களின் மூலம் குறித்த உணவுப் பொருட்களின் விலைகளும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று முதல் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளில் மாற்றம் - வெளியான வர்த்தமானி அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் மீதான விசேட வர்த்தகப் பண்ட வரியைக் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, இறக்குமதி செய்யப்படும் நெத்தலி, மாசி மற்றும் உலர்ந்த மிளகாய் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், இந்த வரித் திருத்தங்கள் இன்று (13) முதல் நடைமுறைக்கு வருகின்றன.2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நேற்று (12) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுர குமார திஸாநாயக்க, இந்த வரிக் குறைப்புகள் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அறிவித்திருந்தார்.இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் நெத்தலி ஒரு கிலோகிராமுக்கு விதிக்கப்பட்டிருந்த 100 ரூபா விசேட வர்த்தகப் பண்ட வரி 10 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.அதேபோன்று, மாசி ஒரு கிலோகிராமுக்கு விதிக்கப்பட்டிருந்த 302 ரூபா வரி 10 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.மேலும், தூளாக்கப்பட்ட மற்றும் தூளாக்கப்படாத உலர்ந்த மிளகாய் ஒரு கிலோகிராமுக்கு விதிக்கப்படும் விசேட வர்த்தகப் பண்ட வரி 50 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பினால் நுகர்வோர் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த வரிக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.இந்த வரித் திருத்தங்களின் மூலம் குறித்த உணவுப் பொருட்களின் விலைகளும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.