• May 06 2024

மார்ச் முதல் பாடசாலை பாடத்திட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம்..! மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் அறிவிப்பு

Chithra / Mar 4th 2024, 7:35 am
image

Advertisement

 

பாடசாலைகளில் தரம் 8 மற்றும் அதற்கு மேற்பட்ட  தரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப பாடத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI) அறிமுகம் செய்யப்பட உள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

இதற்கான முன்னோடி திட்டம் மார்ச் 19 முதல் 20 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பணிக்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த ஆண்டில் இது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில், நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் திறன்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப அவர்களின் எதிர்கால இலக்குகளை அடைவதற்குத் தேவையான பின்னணி வழங்கப்படும்  என  கல்வி அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

மார்ச் முதல் பாடசாலை பாடத்திட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம். மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் அறிவிப்பு  பாடசாலைகளில் தரம் 8 மற்றும் அதற்கு மேற்பட்ட  தரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப பாடத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI) அறிமுகம் செய்யப்பட உள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.இதற்கான முன்னோடி திட்டம் மார்ச் 19 முதல் 20 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இந்த பணிக்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த ஆண்டில் இது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.எதிர்காலத்தில், நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் திறன்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப அவர்களின் எதிர்கால இலக்குகளை அடைவதற்குத் தேவையான பின்னணி வழங்கப்படும்  என  கல்வி அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement