• Dec 17 2025

மன்னார் நகர சபை அமர்வில் குழப்பம்; சபை உறுப்பினர்கள் ஐவர் வெளிநடப்பு!

shanuja / Dec 15th 2025, 10:08 pm
image

மன்னார் நகரசபை அமர்வில் குழப்பநிலை  ஏற்பட்டதோடு, ஐந்து உறுப்பினர்கள் சபை அமர்வில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.


மன்னார் நகர சபையின்  7ஆவது  மாதாந்த அமர்வு   நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் தலைமையில் இன்றைய தினம் திங்கட்கிழமை (15) காலை 10 மணியளவில் ஆரம்பமானது.


சபை அமர்வு   ஆரம்பமாகி சிறிது நேரத்திலேயே ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.


தவிசாளர் உறுப்பினர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதில்லை   உட்பட பல  குற்றச்சாட்டுகளை  முன் வைத்து   சபை உறுப்பினர்கள் 5 பேர் சபையை புறக்கணித்து உடனடியாக வெளிநடப்பு செய்தனர்.


வெளியேறிய உறுப்பினர்களை தவிர ஏனைய உறுப்பினர்களுடன்  தவிசாளர் தொடர்ந்து சபை அமர்வை முன்னெடுத்துச் சென்றார்.


வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள் சபையின் தவிசாளருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன் வைத்து தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

மன்னார் நகர சபை அமர்வில் குழப்பம்; சபை உறுப்பினர்கள் ஐவர் வெளிநடப்பு மன்னார் நகரசபை அமர்வில் குழப்பநிலை  ஏற்பட்டதோடு, ஐந்து உறுப்பினர்கள் சபை அமர்வில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.மன்னார் நகர சபையின்  7ஆவது  மாதாந்த அமர்வு   நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் தலைமையில் இன்றைய தினம் திங்கட்கிழமை (15) காலை 10 மணியளவில் ஆரம்பமானது.சபை அமர்வு   ஆரம்பமாகி சிறிது நேரத்திலேயே ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.தவிசாளர் உறுப்பினர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதில்லை   உட்பட பல  குற்றச்சாட்டுகளை  முன் வைத்து   சபை உறுப்பினர்கள் 5 பேர் சபையை புறக்கணித்து உடனடியாக வெளிநடப்பு செய்தனர்.வெளியேறிய உறுப்பினர்களை தவிர ஏனைய உறுப்பினர்களுடன்  தவிசாளர் தொடர்ந்து சபை அமர்வை முன்னெடுத்துச் சென்றார்.வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள் சபையின் தவிசாளருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன் வைத்து தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement