• Nov 23 2024

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் - மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு!

Tamil nila / Jul 6th 2024, 8:58 pm
image

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்தை வலியுறுத்தியும் வைத்திய பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கும் கடையடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக காலை 8 மணியளவில் கூடி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

போராட்டம் தொடர்பான துண்டுப்பிரசுரம் தென்மராட்சி பகுதிகளில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்காக செயற்பட முனையும் புதிய வைத்திய அத்தியட்சகருக்கு ஏதிராக முன்னெடுக்கப்படும் சதிகளை உடைத்தெறியவும் வைத்தியசாலையின் பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும்  கடையடைப்புக்கும் சாவகச்சேரி பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் ராமநாதன் அர்ச்சுனாவை மாற்றக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மூன்றாவது பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் - மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்தை வலியுறுத்தியும் வைத்திய பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கும் கடையடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் திங்கட்கிழமை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக காலை 8 மணியளவில் கூடி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.போராட்டம் தொடர்பான துண்டுப்பிரசுரம் தென்மராட்சி பகுதிகளில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்காக செயற்பட முனையும் புதிய வைத்திய அத்தியட்சகருக்கு ஏதிராக முன்னெடுக்கப்படும் சதிகளை உடைத்தெறியவும் வைத்தியசாலையின் பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும்  கடையடைப்புக்கும் சாவகச்சேரி பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் ராமநாதன் அர்ச்சுனாவை மாற்றக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மூன்றாவது பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement