• Sep 20 2024

சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு ஆவணி மகோத்ஸவம் 23ம் திகதி ஆரம்பம்!

Tamil nila / Jul 14th 2024, 10:44 pm
image

Advertisement

சிலாபம் முன்னேஸ்வரம்  ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதசுவாமி தேவஸ்தானத்தின் ஆவணி மகோத்ஸவம் இம்மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக ஆலயத்தின் பிரதம குருவும், தர்மகர்த்தாவுமான பிரம்மஸ்ரீ ச.பத்மநாபக் குருக்கள் தெரிவித்தார்.

குறித்த மகோத்ஸவ திருவிழா தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (14) மாலை ஆலயத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது,

சிலாபம் முன்னேஸ்வரம் கோயில் இலங்கையில் உள்ள ஐந்து பெரும் சிவாலயங்களில் (ஈசுவரங்களில்) ஒன்றாகும்.

இந்த நிலையில், முன்னேஸ்வரம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதுடன், தொடர்ந்து 28 தினங்கள் உற்சவங்கள் மற்றும் விஷேட பூஜைகள் உட்பட திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கமாகும்.

இந்த மகோஸ்தவத்தில் அனைத்து அடியார்களும் வருகை தந்து இறைவனுடைய திருவருளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

அதன் அடிப்படையில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி மாலை 4.30 க்கு விநாயகர் உற்சவமும், 12 ஆம் திகதி 4.30 க்கு சுப்ரமணிய உற்சவமும், 13 ஆம் திகதி 4.30 க்கு மஹா விஷ்ணு உற்சவமும், 14 ஆம் திகதி மாலை 3.30 க்கு தீ மிதிப்பு உற்சவமும் நடைபெறும்.

மேலும், ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி மாலை 4.30 க்கு பிஷாடனர் உற்சவமும், 16 ஆம் திகதி மாலை 4.30 க்கு நடேசர் உற்சவமும், 17 ஆம் திகதி மாலை 3.30 க்கு வேட்டைத் திருவிழாவும், 18 ஆம் திகதி காலை 10 மணிக்கு தேர்த் திருவிழாவும், 19 ஆம் திகதி தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.

அத்துடன், ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி  மாலை 4 மணிக்கு பூங்காவனம் சண்டேஸ்வரர் பூஜை வைரவர் மடை போன்ற நிகழ்வுடன் உற்சவம் இனிதே நிறைவு பெறும்.

இதேவேளை, குறித்த திருவிழாவுக்கு பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் , முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி விஷேட உள்ளூர் பஸ் சேவைகளும் இடம்பெறவுள்ளதுடன், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ரயில்வே திணைக்களமும் பக்கத்களின் போக்குவரத்துக்காக ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளன.

அத்தோடு, திருவிழாக்கு வருகை தரும் பக்தர்களின் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கு விஷேடமாக வாகன தரிப்பிடமும் அமைக்கப்படவுள்ளதுடன், பக்கதர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஆலயத்தை சுற்றி பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

சிலாபம் பிரதேச செயலகம், மாதம்பை பிரதேச சபை உட்பட அரச அலுவலகங்கள் ஒன்றிணைந்து இந்த உற்சவத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கான சகல சேவைகளையும் வழங்குவதற்காக கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.

மேலும், இங்கு வரும் அனைத்து பக்தர்களும் இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் என்பனவற்றின் பாவனைகளை தவிர்த்து இயற்கைக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும். 

 எனவே, இந்த திருவிழாவை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்கள் முழுமையான ஒத்துழைப்பிக்களை வழங்க வேண்டும் என்றார்.


சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு ஆவணி மகோத்ஸவம் 23ம் திகதி ஆரம்பம் சிலாபம் முன்னேஸ்வரம்  ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதசுவாமி தேவஸ்தானத்தின் ஆவணி மகோத்ஸவம் இம்மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக ஆலயத்தின் பிரதம குருவும், தர்மகர்த்தாவுமான பிரம்மஸ்ரீ ச.பத்மநாபக் குருக்கள் தெரிவித்தார்.குறித்த மகோத்ஸவ திருவிழா தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (14) மாலை ஆலயத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு கூறினார்.இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது,சிலாபம் முன்னேஸ்வரம் கோயில் இலங்கையில் உள்ள ஐந்து பெரும் சிவாலயங்களில் (ஈசுவரங்களில்) ஒன்றாகும்.இந்த நிலையில், முன்னேஸ்வரம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதுடன், தொடர்ந்து 28 தினங்கள் உற்சவங்கள் மற்றும் விஷேட பூஜைகள் உட்பட திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கமாகும்.இந்த மகோஸ்தவத்தில் அனைத்து அடியார்களும் வருகை தந்து இறைவனுடைய திருவருளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.அதன் அடிப்படையில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி மாலை 4.30 க்கு விநாயகர் உற்சவமும், 12 ஆம் திகதி 4.30 க்கு சுப்ரமணிய உற்சவமும், 13 ஆம் திகதி 4.30 க்கு மஹா விஷ்ணு உற்சவமும், 14 ஆம் திகதி மாலை 3.30 க்கு தீ மிதிப்பு உற்சவமும் நடைபெறும்.மேலும், ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி மாலை 4.30 க்கு பிஷாடனர் உற்சவமும், 16 ஆம் திகதி மாலை 4.30 க்கு நடேசர் உற்சவமும், 17 ஆம் திகதி மாலை 3.30 க்கு வேட்டைத் திருவிழாவும், 18 ஆம் திகதி காலை 10 மணிக்கு தேர்த் திருவிழாவும், 19 ஆம் திகதி தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.அத்துடன், ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி  மாலை 4 மணிக்கு பூங்காவனம் சண்டேஸ்வரர் பூஜை வைரவர் மடை போன்ற நிகழ்வுடன் உற்சவம் இனிதே நிறைவு பெறும்.இதேவேளை, குறித்த திருவிழாவுக்கு பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் , முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி விஷேட உள்ளூர் பஸ் சேவைகளும் இடம்பெறவுள்ளதுடன், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ரயில்வே திணைக்களமும் பக்கத்களின் போக்குவரத்துக்காக ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளன.அத்தோடு, திருவிழாக்கு வருகை தரும் பக்தர்களின் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கு விஷேடமாக வாகன தரிப்பிடமும் அமைக்கப்படவுள்ளதுடன், பக்கதர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஆலயத்தை சுற்றி பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.சிலாபம் பிரதேச செயலகம், மாதம்பை பிரதேச சபை உட்பட அரச அலுவலகங்கள் ஒன்றிணைந்து இந்த உற்சவத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கான சகல சேவைகளையும் வழங்குவதற்காக கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.மேலும், இங்கு வரும் அனைத்து பக்தர்களும் இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் என்பனவற்றின் பாவனைகளை தவிர்த்து இயற்கைக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும்.  எனவே, இந்த திருவிழாவை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்கள் முழுமையான ஒத்துழைப்பிக்களை வழங்க வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement