அக்கரைப்பற்று மீரா ஓடை குளத்தில் விழுந்து குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அந்தப்பகுதியை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
மீரா ஓடை குளத்தில் நேற்று (15) இரவு, 2 வயது ஆண் குழந்தை ஒன்று விழுந்துள்ளது. குளத்தில் வீழ்ந்த குழந்தையை மீட்டு அக்கரைப்பற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதும் குழந்தை உயிரிழந்தது.
குளத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்படாததால் குழந்தை உயிரிழந்துள்ளது என்று அந்தப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டு மீரா ஓடை பகுதியில் இன்று (16) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது குளத்தைச் சுற்றிப் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி அந்தப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
குளத்தில் விழுந்து உயிரிழந்த குழந்தைக்கு இன்றைய தினம் (16) பிறந்தநாள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பிறந்தநாளில் குழந்தை உயிரிழந்துள்ளது குழந்தையின் குடும்பத்தையும் அந்தப்பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதேவேளை குறித்த குளத்தில் ஏற்கனவே 2 சிறுவர்கள் வீழ்ந்து உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீரா ஓடை குளத்தில் விழுந்து குழந்தை பலி - ஆர்ப்பாட்டத்தில் குதித்த மக்கள் அக்கரைப்பற்று மீரா ஓடை குளத்தில் விழுந்து குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அந்தப்பகுதியை சோகத்தில் மூழ்கடித்துள்ளது. மீரா ஓடை குளத்தில் நேற்று (15) இரவு, 2 வயது ஆண் குழந்தை ஒன்று விழுந்துள்ளது. குளத்தில் வீழ்ந்த குழந்தையை மீட்டு அக்கரைப்பற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதும் குழந்தை உயிரிழந்தது.குளத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்படாததால் குழந்தை உயிரிழந்துள்ளது என்று அந்தப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டு மீரா ஓடை பகுதியில் இன்று (16) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இதன்போது குளத்தைச் சுற்றிப் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி அந்தப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். குளத்தில் விழுந்து உயிரிழந்த குழந்தைக்கு இன்றைய தினம் (16) பிறந்தநாள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பிறந்தநாளில் குழந்தை உயிரிழந்துள்ளது குழந்தையின் குடும்பத்தையும் அந்தப்பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதேவேளை குறித்த குளத்தில் ஏற்கனவே 2 சிறுவர்கள் வீழ்ந்து உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.