யாழ்.பல்கலை கிளிநொச்சி வளாகத்தில் வறண்ட மண்டல விவசாய சர்வதேச மாநாடு!
வறண்ட மண்டல விவசாயம் தொடர்பான 11வது சர்வதேச மாநாடு யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீட கேட்போர் கூடத்தில் இன்று (16)நடைபெற்றது.
விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் க.பகீரதன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்
பேராசிரியர் சி. ஸ்ரீசற்குணராஜா கலந்து கொண்டார்.
நிகழ்வின் பேச்சாளர்களாக நியூசிலாந்து பல்கலைக்கழகத்தின் மஞ்சுளா குலரத்னா லிங்கன் ,யப்பான் பல்கலைக்கழகத்தின் யுகா சசாகி யமகட்டா, பேராதனை பல்கலைக்கழகத்தின் ஹிமால் ஏ. சுரவீர ஆகியோர் உரையாற்றினர்.
மேலும் நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், விவசாயத்துறை சார்ந்த அதிகாரிகள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
யாழ்.பல்கலை கிளிநொச்சி வளாகத்தில் வறண்ட மண்டல விவசாய சர்வதேச மாநாடு யாழ்.பல்கலை கிளிநொச்சி வளாகத்தில் வறண்ட மண்டல விவசாய சர்வதேச மாநாடுவறண்ட மண்டல விவசாயம் தொடர்பான 11வது சர்வதேச மாநாடு யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீட கேட்போர் கூடத்தில் இன்று (16)நடைபெற்றது. விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் க.பகீரதன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்பேராசிரியர் சி. ஸ்ரீசற்குணராஜா கலந்து கொண்டார். நிகழ்வின் பேச்சாளர்களாக நியூசிலாந்து பல்கலைக்கழகத்தின் மஞ்சுளா குலரத்னா லிங்கன் ,யப்பான் பல்கலைக்கழகத்தின் யுகா சசாகி யமகட்டா, பேராதனை பல்கலைக்கழகத்தின் ஹிமால் ஏ. சுரவீர ஆகியோர் உரையாற்றினர். மேலும் நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், விவசாயத்துறை சார்ந்த அதிகாரிகள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.