இஸ்ரேலிய தாக்குதல்களில் இருந்து தப்பித்து காசாவின் தெற்கு பகுதி நோக்கி ஓடிய கர்ப்பிணிப் பெண் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
28 வயதான இஸ்மான் அல்-மஸ்ரே என்ற இந்த கர்ப்பிணிப் பெண் காசா பகுதியின் வடக்குப் பகுதியில் வசித்து வந்த நிலையில் இஸ்ரேலியப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால், அவர் தனது கணவருடன் தெற்கு காசாவிற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த கர்ப்பிணிப் பெண் நேற்று (28) இரண்டு பெண் குழந்தைகளையும் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்தார்.
தெற்கு காசாவில் மருத்துவமனை வசதிகள் காணப்படாத நிலையில் அங்குள்ள ஒரு பள்ளி கட்டிடத்தில், குறைந்த வசதிகளுடன் இயங்கும் மருத்துவ மையத்திலேயே குறித்த கர்ப்பிணிப் பெண் நான்கு குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல்-காசா போரின் நடுவே பிறந்த குழந்தைகள். பள்ளிக் கட்டிடத்தில் நடந்த பிரசவம்.samugammedia இஸ்ரேலிய தாக்குதல்களில் இருந்து தப்பித்து காசாவின் தெற்கு பகுதி நோக்கி ஓடிய கர்ப்பிணிப் பெண் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.28 வயதான இஸ்மான் அல்-மஸ்ரே என்ற இந்த கர்ப்பிணிப் பெண் காசா பகுதியின் வடக்குப் பகுதியில் வசித்து வந்த நிலையில் இஸ்ரேலியப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால், அவர் தனது கணவருடன் தெற்கு காசாவிற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.இந்நிலையில் குறித்த கர்ப்பிணிப் பெண் நேற்று (28) இரண்டு பெண் குழந்தைகளையும் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்தார்.தெற்கு காசாவில் மருத்துவமனை வசதிகள் காணப்படாத நிலையில் அங்குள்ள ஒரு பள்ளி கட்டிடத்தில், குறைந்த வசதிகளுடன் இயங்கும் மருத்துவ மையத்திலேயே குறித்த கர்ப்பிணிப் பெண் நான்கு குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.