• May 17 2024

தமிழர் பகுதியில் போசாக்கு குறைவால் பாதிக்கப்படும் சிறுவர்கள்..! அதிர்ச்சித் தகவல் samugammedia

Chithra / Jun 14th 2023, 11:35 am
image

Advertisement

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் எண்ணாயிரம் வரையான சிறுவர்கள் போசாக்கு குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஒன்று முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட சுமார் எண்ணாயிரம் முன்பள்ளி சிறார்கள் போசாக்கு குறைவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாகாணத்தில் 5 வயதுக்குட்பட்ட சிறார்களின் போசாக்கினை அதிகரிப்பதற்கான 6 மாத காலத்திற்கான சத்துமா வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் அதற்கான நிதி மூன்று மாதங்களுக்கு மட்டுமே போதுமானதாக காணப்படுகின்றது.

எனவே மிகுதியாக காணப்படும் மூன்று மாதங்களுக்கு தேவையான நிதியினை நாடாளுமன்ற உறுப்பினர்கள், அல்லது கிராம மட்ட பொது அமைப்புகள் அதற்கான நிதியினை வழங்க முன்வரவேண்டுமென தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவம், பொலிஸ் கட்டுப்பாட்டில் காணப்படும் கிளிநொச்சி மகாவித்தியாலய விளையாட்டுத் திடலுக்கான பாதை, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக காணப்படும் நூலக கட்டடத்துக்கான காணி, டிப்போ சந்தி இராணுவ நினைவுச் சின்னம் அமைந்துள்ள இரத்தினபுரம் காணி, என்பன தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞான சிறிதரன் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இது தொடர்பாக சம்பந்தபட்டவர்களுடன் கலந்துரையாடி காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை திருவையாறு படித்த மகளிர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பலரது காணிகள் அம்பாள்நகர் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுபாட்டில் காணப்படுவதாகவும் அவ்வாறான காணிகளை விடுவித்து தருமாறு காணியின் உரிமையாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


தமிழர் பகுதியில் போசாக்கு குறைவால் பாதிக்கப்படும் சிறுவர்கள். அதிர்ச்சித் தகவல் samugammedia கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் எண்ணாயிரம் வரையான சிறுவர்கள் போசாக்கு குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஒன்று முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட சுமார் எண்ணாயிரம் முன்பள்ளி சிறார்கள் போசாக்கு குறைவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மாகாணத்தில் 5 வயதுக்குட்பட்ட சிறார்களின் போசாக்கினை அதிகரிப்பதற்கான 6 மாத காலத்திற்கான சத்துமா வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் அதற்கான நிதி மூன்று மாதங்களுக்கு மட்டுமே போதுமானதாக காணப்படுகின்றது.எனவே மிகுதியாக காணப்படும் மூன்று மாதங்களுக்கு தேவையான நிதியினை நாடாளுமன்ற உறுப்பினர்கள், அல்லது கிராம மட்ட பொது அமைப்புகள் அதற்கான நிதியினை வழங்க முன்வரவேண்டுமென தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவம், பொலிஸ் கட்டுப்பாட்டில் காணப்படும் கிளிநொச்சி மகாவித்தியாலய விளையாட்டுத் திடலுக்கான பாதை, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக காணப்படும் நூலக கட்டடத்துக்கான காணி, டிப்போ சந்தி இராணுவ நினைவுச் சின்னம் அமைந்துள்ள இரத்தினபுரம் காணி, என்பன தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞான சிறிதரன் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இது தொடர்பாக சம்பந்தபட்டவர்களுடன் கலந்துரையாடி காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதேவேளை திருவையாறு படித்த மகளிர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பலரது காணிகள் அம்பாள்நகர் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுபாட்டில் காணப்படுவதாகவும் அவ்வாறான காணிகளை விடுவித்து தருமாறு காணியின் உரிமையாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement