புத்தளம் - சிலாபம் கடற்கரையில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் நாய்கள் சாப்பிட்டதாக கருதப்படும் குழந்தையின் கால் ஒன்றை கண்டுபிடித்த பிரதேசவாசிகள், பொலிஸாரிடம் அறிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக சிலாபத்தில் குழந்தையொன்று உயிரிழந்ததாகவோ அல்லது புதைக்கப்படவோ இல்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சிலாபம் பொது வைத்தியசாலையிலும் அவ்வாறான குழந்தை மரணம் குறித்த தகவல் எதுவும் பதிவாகவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இந் நிலையில் இந்த குழந்தையின் காலை நாய் எங்கிருந்து கொண்டு வந்தது என சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாய்கள் சாப்பிட்ட நிலையில் மீட்கப்பட்ட குழந்தையின் கால் - சிலாபம் கடற்கரையில் பதற்றம் புத்தளம் - சிலாபம் கடற்கரையில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் நாய்கள் சாப்பிட்டதாக கருதப்படும் குழந்தையின் கால் ஒன்றை கண்டுபிடித்த பிரதேசவாசிகள், பொலிஸாரிடம் அறிவித்துள்ளனர்.இச்சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.அண்மைக்காலமாக சிலாபத்தில் குழந்தையொன்று உயிரிழந்ததாகவோ அல்லது புதைக்கப்படவோ இல்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மேலும் சிலாபம் பொது வைத்தியசாலையிலும் அவ்வாறான குழந்தை மரணம் குறித்த தகவல் எதுவும் பதிவாகவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.இந் நிலையில் இந்த குழந்தையின் காலை நாய் எங்கிருந்து கொண்டு வந்தது என சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.