• May 17 2024

காதலிச்சுட்டு வாங்க – கல்லூரி மாணவர்களுக்கு காதல் விடுமுறை அளித்த சீனா! samugammedia

Tamil nila / Apr 2nd 2023, 4:21 pm
image

Advertisement


சீனாவில் மக்கள் தொகையை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் கல்லூரி மாணவர்களிடையே காதலை ஊக்குவிக்க காதல் விடுமுறையை அறிவித்துள்ளது.


சீனாவில் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வந்ததால் ஒரு கணவன் – மனைவி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று புதிய சட்டத்தை கொண்டு வந்தது. இதனால் குழந்தை பிறப்பு வீதம் குறைந்த நிலையில் எதிர்காலத்தில் சீனாவில் இளைஞர்கள் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டது.


அதனால் தற்போது குழந்தைகளை அதிகம் பெற்றுக் கொள்ளும்படி சீன அரசு மக்களுக்கு வலியுறுத்தியுள்ளது. ஒரு குழந்தைக்கும் அதிகமாக பெற்றுக் கொள்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள், விடுமுறைகள் என அள்ளி வழங்கி வருகிறது. அதேசமயம் இளைஞர்கள் காதலிக்கவும் தேவையான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.


அதன்படி, கல்லூரி மாணவர்கள் படிப்பு சுமையில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக காதலிக்க ‘காதல் விடுமுறை’ திட்டத்தை சீனாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன. அதன்படி ஏப்ரல் 1 முதல் 7ம் தேதி வரை 7 நாட்களுக்கு 9 கல்லூரிகளில் காதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி காதல் விடுமுறையில் இருக்கும் மாணவர்கள் தங்கள் காதலியுடன் சுற்றுலா பகுதிகளுக்கு சென்று அந்த அனுபவங்களை டைரியில் எழுதியோ, வீடியோ வி லாக்காக எடுத்தோ கொண்டு வந்து சமர்பிக்க வேண்டுமாம். இந்த காதல் விடுமுறை பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.


காதலிச்சுட்டு வாங்க – கல்லூரி மாணவர்களுக்கு காதல் விடுமுறை அளித்த சீனா samugammedia சீனாவில் மக்கள் தொகையை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் கல்லூரி மாணவர்களிடையே காதலை ஊக்குவிக்க காதல் விடுமுறையை அறிவித்துள்ளது.சீனாவில் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வந்ததால் ஒரு கணவன் – மனைவி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று புதிய சட்டத்தை கொண்டு வந்தது. இதனால் குழந்தை பிறப்பு வீதம் குறைந்த நிலையில் எதிர்காலத்தில் சீனாவில் இளைஞர்கள் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டது.அதனால் தற்போது குழந்தைகளை அதிகம் பெற்றுக் கொள்ளும்படி சீன அரசு மக்களுக்கு வலியுறுத்தியுள்ளது. ஒரு குழந்தைக்கும் அதிகமாக பெற்றுக் கொள்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள், விடுமுறைகள் என அள்ளி வழங்கி வருகிறது. அதேசமயம் இளைஞர்கள் காதலிக்கவும் தேவையான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.அதன்படி, கல்லூரி மாணவர்கள் படிப்பு சுமையில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக காதலிக்க ‘காதல் விடுமுறை’ திட்டத்தை சீனாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன. அதன்படி ஏப்ரல் 1 முதல் 7ம் தேதி வரை 7 நாட்களுக்கு 9 கல்லூரிகளில் காதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி காதல் விடுமுறையில் இருக்கும் மாணவர்கள் தங்கள் காதலியுடன் சுற்றுலா பகுதிகளுக்கு சென்று அந்த அனுபவங்களை டைரியில் எழுதியோ, வீடியோ வி லாக்காக எடுத்தோ கொண்டு வந்து சமர்பிக்க வேண்டுமாம். இந்த காதல் விடுமுறை பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement