• Oct 14 2026

கிழக்கு மாகாண பாரம்பரிய விளையாட்டுப் போட்டியில் சீனடி! இம்ரான் எம்.பி. முக்கிய கோரிக்கை

Aathira / Oct 14th 2026, 7:26 am
image

கிழக்கு மாகாண பாரம்பரிய விளையாட்டுப் போட்டியில் சீனடியையும் இணைத்துக் கொள்ளுமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளருக்கு 14ஆம் திகதி அனுப்பிய கடிதத்திலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கிழக்கு மாகாணப் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பாராட்டுக்குரியவை எனக் குறிப்பிட்டுள்ள அவர், மறைந்து வரும் பாரம்பரியங்களைப் பாதுகாப்பதற்கு இத்தகைய முயற்சிகள் உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண மக்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சீனடியையும் போட்டியில் இணைத்துக் கொள்வதன் மூலம், அந்த விளையாட்டை மறைந்து போகாமல் பாதுகாக்க முடியும் என்றும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பாரம்பரிய விளையாட்டுப் போட்டியில் சீனடியையும் இணைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிழக்கு மாகாண பாரம்பரிய விளையாட்டுப் போட்டியில் சீனடி இம்ரான் எம்.பி. முக்கிய கோரிக்கை கிழக்கு மாகாண பாரம்பரிய விளையாட்டுப் போட்டியில் சீனடியையும் இணைத்துக் கொள்ளுமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளருக்கு 14ஆம் திகதி அனுப்பிய கடிதத்திலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.கிழக்கு மாகாணப் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பாராட்டுக்குரியவை எனக் குறிப்பிட்டுள்ள அவர், மறைந்து வரும் பாரம்பரியங்களைப் பாதுகாப்பதற்கு இத்தகைய முயற்சிகள் உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாண மக்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சீனடியையும் போட்டியில் இணைத்துக் கொள்வதன் மூலம், அந்த விளையாட்டை மறைந்து போகாமல் பாதுகாக்க முடியும் என்றும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே, பாரம்பரிய விளையாட்டுப் போட்டியில் சீனடியையும் இணைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement