• May 17 2024

இலங்கையை இராணுவதளபாட விநியோக தளமாக பயன்படுத்துவதற்கு சீனா முயற்சி! samugammedia

Chithra / Oct 23rd 2023, 12:32 pm
image

Advertisement

 


இலங்கையை இராணுவதளபாட விநியோகத்திற்காக பயன்படுத்துவது குறித்து சீனா ஆராய்ந்துள்ளது என பென்டகன் தெரிவித்துள்ளது.

சீனா தனது உலகளாவிய இராணுவ தளங்களை விஸ்தரிக்க முயற்கின்றது.  சீனா தனது இராணுவதளபாட விநியோகத்திற்காக 18 நாடுகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளது எனவும் பென்டகன் குறிப்பிட்டுள்ளது.

இராணுவ நடவடிக்கைகளிற்கான தேவை எழும்போது, சீனா இராணுவம் பயன்படுத்தக்கூடிய தளங்களை உருவாக்குவது குறித்தே கவனம் செலுத்துகின்றது.

சீனா இராணுவதளபாட விநியோகத்திற்கான தளங்களை ஏற்படுத்துவது குறித்து ஆராயும் நாடுகளில் நான்கு நாடுகள் இந்தியாவின் நெருங்கிய அயல்நாடுகளாகும். பங்களாதேஸ், இலங்கை, மியன்மார், பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளே இவை என பென்டகன் தெரிவித்துள்ளது.

ஏனைய மூன்று நாடுகளும் தென்கிழக்காசிய நாடுகள், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா என 2023 இல் சீனாவில் இராணுவம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற அமெரிக்காவின் காங்கிரஸிற்கான அமெரிக்காவின் பாதுகாப்பு வருடாந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

தொலைதூரங்களில் தனது இராணுவவலிமையை வெளிப்படுத்துவதற்கு உதவும் விதத்தில் சீனா தனது வெளிநாட்டு உட்கட்டமைப்பு மற்றும் விநியோக வசதிகளை விஸ்தரிக்க முயல்கின்றது.

சீனாவின் இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை குழப்பலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையை இராணுவதளபாட விநியோக தளமாக பயன்படுத்துவதற்கு சீனா முயற்சி samugammedia  இலங்கையை இராணுவதளபாட விநியோகத்திற்காக பயன்படுத்துவது குறித்து சீனா ஆராய்ந்துள்ளது என பென்டகன் தெரிவித்துள்ளது.சீனா தனது உலகளாவிய இராணுவ தளங்களை விஸ்தரிக்க முயற்கின்றது.  சீனா தனது இராணுவதளபாட விநியோகத்திற்காக 18 நாடுகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளது எனவும் பென்டகன் குறிப்பிட்டுள்ளது.இராணுவ நடவடிக்கைகளிற்கான தேவை எழும்போது, சீனா இராணுவம் பயன்படுத்தக்கூடிய தளங்களை உருவாக்குவது குறித்தே கவனம் செலுத்துகின்றது.சீனா இராணுவதளபாட விநியோகத்திற்கான தளங்களை ஏற்படுத்துவது குறித்து ஆராயும் நாடுகளில் நான்கு நாடுகள் இந்தியாவின் நெருங்கிய அயல்நாடுகளாகும். பங்களாதேஸ், இலங்கை, மியன்மார், பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளே இவை என பென்டகன் தெரிவித்துள்ளது.ஏனைய மூன்று நாடுகளும் தென்கிழக்காசிய நாடுகள், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா என 2023 இல் சீனாவில் இராணுவம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற அமெரிக்காவின் காங்கிரஸிற்கான அமெரிக்காவின் பாதுகாப்பு வருடாந்த அறிக்கை தெரிவித்துள்ளது.தொலைதூரங்களில் தனது இராணுவவலிமையை வெளிப்படுத்துவதற்கு உதவும் விதத்தில் சீனா தனது வெளிநாட்டு உட்கட்டமைப்பு மற்றும் விநியோக வசதிகளை விஸ்தரிக்க முயல்கின்றது.சீனாவின் இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை குழப்பலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement