• Oct 29 2024

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு - நிராகரிக்கும் சீனா! samugammedia

Tamil nila / Aug 19th 2023, 7:38 pm
image

Advertisement

இலங்கையின் வெளிநாட்டு கடனை மறுசீரமைக்கும் செயற்பாடுகளில் ஏனைய கடன் உரிமையாளர்களுடன் பொது பொறிமுறைக்குள் வருவதை சீனா தொடர்ந்தும் நிராகரித்து வருவதாக தெரியவருகிறது.

சீனா, இலங்கையின் பிரதான இருத்தரப்பு கடனை உரிமையாளர் நாடாகும்.

இலங்கையின் வெளிநாட்டு கடனை மறுசீரமைக்கும் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக ஜப்பான்,இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் இணைந்து பொது மேடையை உருவாகியுள்ளதுடன் சீனா கண்காணிப்பு மட்டத்தில் அதில் கலந்துக்கொண்டு வருகிறது.

அண்மையில், குறுகிய விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரன், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்காக சீனாவில் உதவியை பெற்று தர தலையீடுகளை மேற்கொள்வதாக உறுதியளித்திருந்தார்.

இதற்கு மேலதிகமாக நிதியமைச்சின் அதிகாரிகள், ஜனாதிபதி மற்றும் அண்மையில் சீனாவுக்கு விஜயம் செய்த பிரதமர் உள்ளிட்டோர் வெளிநாட்டு கடனை மறுசீரமைக்கும் செயற்பாட்டுக்கு உதவுமாறு சீனாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எவ்வாறாயினும் கடன் மறுசீரமைப்பு என்ற வார்த்தையை கூட சீனா நிராகரித்துள்ளதுடன் கடன் முகாமைத்துவம் என்ற வார்த்தையே மிகவும் பொருத்தமானது கூறியுள்ளது.

இலங்கை சீனாவுக்கு 7.4 பில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு - நிராகரிக்கும் சீனா samugammedia இலங்கையின் வெளிநாட்டு கடனை மறுசீரமைக்கும் செயற்பாடுகளில் ஏனைய கடன் உரிமையாளர்களுடன் பொது பொறிமுறைக்குள் வருவதை சீனா தொடர்ந்தும் நிராகரித்து வருவதாக தெரியவருகிறது.சீனா, இலங்கையின் பிரதான இருத்தரப்பு கடனை உரிமையாளர் நாடாகும்.இலங்கையின் வெளிநாட்டு கடனை மறுசீரமைக்கும் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக ஜப்பான்,இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் இணைந்து பொது மேடையை உருவாகியுள்ளதுடன் சீனா கண்காணிப்பு மட்டத்தில் அதில் கலந்துக்கொண்டு வருகிறது.அண்மையில், குறுகிய விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரன், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்காக சீனாவில் உதவியை பெற்று தர தலையீடுகளை மேற்கொள்வதாக உறுதியளித்திருந்தார்.இதற்கு மேலதிகமாக நிதியமைச்சின் அதிகாரிகள், ஜனாதிபதி மற்றும் அண்மையில் சீனாவுக்கு விஜயம் செய்த பிரதமர் உள்ளிட்டோர் வெளிநாட்டு கடனை மறுசீரமைக்கும் செயற்பாட்டுக்கு உதவுமாறு சீனாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.எவ்வாறாயினும் கடன் மறுசீரமைப்பு என்ற வார்த்தையை கூட சீனா நிராகரித்துள்ளதுடன் கடன் முகாமைத்துவம் என்ற வார்த்தையே மிகவும் பொருத்தமானது கூறியுள்ளது.இலங்கை சீனாவுக்கு 7.4 பில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement