• Dec 14 2024

பல்லேகல கிரிக்கெட் மைதானத்தை சுற்றி பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு..!

Sharmi / Oct 25th 2024, 11:58 am
image

கண்டி பல்லேகல கிரிக்கெட் மைதானத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இலங்கை அணியின் பயிற்சிக்கு முன்னதாக மைதானத்தை முழுமையாக சோதனையிடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாளை (26) பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதனிடையே, இஸ்ரேலியர்கள் தங்கியுள்ள கண்டியில் உள்ள சுற்றுலா விடுதிகளுக்கு விசேட பாதுகாப்பை வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் பணிப்புரைக்கமைய இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் சுற்றுலா விடுதிகள் தொடர்பில் விசேட ரோந்து வேலைத்திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பல்லேகல கிரிக்கெட் மைதானத்தை சுற்றி பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு. கண்டி பல்லேகல கிரிக்கெட் மைதானத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், இலங்கை அணியின் பயிற்சிக்கு முன்னதாக மைதானத்தை முழுமையாக சோதனையிடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாளை (26) பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.இதனிடையே, இஸ்ரேலியர்கள் தங்கியுள்ள கண்டியில் உள்ள சுற்றுலா விடுதிகளுக்கு விசேட பாதுகாப்பை வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் பணிப்புரைக்கமைய இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் சுற்றுலா விடுதிகள் தொடர்பில் விசேட ரோந்து வேலைத்திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement