• Nov 25 2024

சீனாவின் செயற்கை கோளை விண்ணுக்கு செலுத்தும் திட்டம் மீண்டும் தோல்வி...!

Anaath / Jul 13th 2024, 11:11 am
image

சீன புத்தாக்க நிறுவனமான ஐ-ஸ்பேஸ் உருவாக்கியுள்ள ரொக்கெட் மூலம் 3 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. 

ஐ-ஸ்பேஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 24 மீட்டா் உயரம் கொண்ட, திட எரிபொருளில் இயங்கும் ‘ஹைப்பா்போலா-1’ ரொக்கெட், கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து வியாழக்கிழமை ஏவப்பட்டது.

அந்த ரொக்கெட்டின் முதல் மூன்று நிலைகளும் சீராக செயல்பட்ட போதும்  நான்காவது நிலையின்போது அந்த ராக்கெட் நிலைதடுமாறி விழுந்தது. இதனால் அந்த ராக்கெட் மூலம், வானிலை முன்னறிவிப்பு, நிலநடுக்க கணிப்புகள் போன்ற நோக்கங்களுக்காக 3 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டம் தோல்வியடைந்துள்ளது. 

இதேவேளை ரொக்கெட் விழுந்து நொறுங்கியதற்கான காரணங்கள் விசாரணைக்குப் பிறகு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியின் சுற்றுப்பாதையை அடைந்த சீனாவின் முதல் தனியாா் நிறுவன ரொக்கெட் என என இந்த நிறுவனம்  பெருமையை பெற்ற போதும் அதன் பிறகு அந்த ரொக்கெட் தொடா்ந்து மூன்று முறை தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவின் செயற்கை கோளை விண்ணுக்கு செலுத்தும் திட்டம் மீண்டும் தோல்வி. சீன புத்தாக்க நிறுவனமான ஐ-ஸ்பேஸ் உருவாக்கியுள்ள ரொக்கெட் மூலம் 3 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. ஐ-ஸ்பேஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 24 மீட்டா் உயரம் கொண்ட, திட எரிபொருளில் இயங்கும் ‘ஹைப்பா்போலா-1’ ரொக்கெட், கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து வியாழக்கிழமை ஏவப்பட்டது.அந்த ரொக்கெட்டின் முதல் மூன்று நிலைகளும் சீராக செயல்பட்ட போதும்  நான்காவது நிலையின்போது அந்த ராக்கெட் நிலைதடுமாறி விழுந்தது. இதனால் அந்த ராக்கெட் மூலம், வானிலை முன்னறிவிப்பு, நிலநடுக்க கணிப்புகள் போன்ற நோக்கங்களுக்காக 3 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டம் தோல்வியடைந்துள்ளது. இதேவேளை ரொக்கெட் விழுந்து நொறுங்கியதற்கான காரணங்கள் விசாரணைக்குப் பிறகு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பூமியின் சுற்றுப்பாதையை அடைந்த சீனாவின் முதல் தனியாா் நிறுவன ரொக்கெட் என என இந்த நிறுவனம்  பெருமையை பெற்ற போதும் அதன் பிறகு அந்த ரொக்கெட் தொடா்ந்து மூன்று முறை தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement