சீனாவின் 'சாங்கே 6' விண்கலம் கடந்த மே மாதம் 3ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது.
நிலவின் இருண்ட பகுதியிலிருந்து மாதிரிகளை சேமிக்கும் நோக்கிலேயே இது அனுப்பப்பட்டது.
முதன் முதலான நிலவின் இருண்ட பகுதியிலிருந்து மண்ணைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டுள்ளதாக சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விண்கலத்தில் மண் மாதிரிகளைச் சேகரிக்க ஒரு இயந்திரக் கை பொருத்தப்பட்டு, துளையிட்டு, தோண்டியதன் பின்னர் மண் எடுக்கப்படும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 2 கிலோகிராம் அளவுடைய மண் மாதிரிகளை வெற்றிகரமாக பூமிக்கு கொண்டு வந்தால், இந்த நடைமுறையில் வெற்றியீட்டிய முதல் நாடாக சீனா இருக்கும்.
இந்த மண் மாதிரிகளை ஆய்வு செய்வதனால், பூமி, சந்திரன், சூரியக் குடும்பம் ஆகியவற்றின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சி தொடர்பான தடயங்களை விஞ்ஞானிகள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சந்திரனிலிருந்து மண்ணை சேகரித்தவுடன் முதல் வேலையாக நிலவின் தெற்குப் பகுதியில் சீனக் கொடியை ஏற்றியது விண்கலம்.
எதிர்வரும் ஜூன் 25ஆம் திகதி குறித்த விண்கலம் சீனாவின் மங்கோலியாக பகுதியின் பாலைவனத்தில் வந்து தரையிறங்கும் என சீன விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலவிலிருந்து மண் மாதிரியை சேகரித்த சீன விண்கலம் சீனாவின் 'சாங்கே 6' விண்கலம் கடந்த மே மாதம் 3ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது.நிலவின் இருண்ட பகுதியிலிருந்து மாதிரிகளை சேமிக்கும் நோக்கிலேயே இது அனுப்பப்பட்டது.முதன் முதலான நிலவின் இருண்ட பகுதியிலிருந்து மண்ணைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டுள்ளதாக சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.விண்கலத்தில் மண் மாதிரிகளைச் சேகரிக்க ஒரு இயந்திரக் கை பொருத்தப்பட்டு, துளையிட்டு, தோண்டியதன் பின்னர் மண் எடுக்கப்படும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.சுமார் 2 கிலோகிராம் அளவுடைய மண் மாதிரிகளை வெற்றிகரமாக பூமிக்கு கொண்டு வந்தால், இந்த நடைமுறையில் வெற்றியீட்டிய முதல் நாடாக சீனா இருக்கும்.இந்த மண் மாதிரிகளை ஆய்வு செய்வதனால், பூமி, சந்திரன், சூரியக் குடும்பம் ஆகியவற்றின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சி தொடர்பான தடயங்களை விஞ்ஞானிகள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.சந்திரனிலிருந்து மண்ணை சேகரித்தவுடன் முதல் வேலையாக நிலவின் தெற்குப் பகுதியில் சீனக் கொடியை ஏற்றியது விண்கலம்.எதிர்வரும் ஜூன் 25ஆம் திகதி குறித்த விண்கலம் சீனாவின் மங்கோலியாக பகுதியின் பாலைவனத்தில் வந்து தரையிறங்கும் என சீன விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.