• Aug 03 2026

ரூ.59 இலட்சம் பெறுமதியான கடத்தல் சிகரெட்டுகளுடன் சீன வர்த்தகர் கைது

dorin / Aug 2nd 2026, 10:41 am
image

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (1) கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய சீனாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. 

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 59 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் எனத் குறிப்பிடப்படுகின்றது. 

சந்தேகநபர் குறித்த சிகரெட்டுக்களை கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் பசுமைப் பாத​ை ஊடாக நாட்டுக்குள் கடத்த முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார். 

இவரது நடத்தை குறித்து சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள் அவரைச் சோதனையிட்டபோது, இரண்டு பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனத் தயாரிப்பான 39,400 சிகரெட்டுகள் அடங்கிய 197 சிகரெட் பெட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன. 

சந்தேகநபர் சீனாவில் கொள்முதல் செய்த சிகரெட்டுக்களுடன் இந்தியாவின் சென்னையை அடைந்து, அங்கிருந்து இண்டிகோ விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவரைத் கைது செய்து, அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ரூ.59 இலட்சம் பெறுமதியான கடத்தல் சிகரெட்டுகளுடன் சீன வர்த்தகர் கைது சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (1) கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய சீனாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 59 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் எனத் குறிப்பிடப்படுகின்றது. சந்தேகநபர் குறித்த சிகரெட்டுக்களை கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் பசுமைப் பாத​ை ஊடாக நாட்டுக்குள் கடத்த முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார். இவரது நடத்தை குறித்து சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள் அவரைச் சோதனையிட்டபோது, இரண்டு பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனத் தயாரிப்பான 39,400 சிகரெட்டுகள் அடங்கிய 197 சிகரெட் பெட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன. சந்தேகநபர் சீனாவில் கொள்முதல் செய்த சிகரெட்டுக்களுடன் இந்தியாவின் சென்னையை அடைந்து, அங்கிருந்து இண்டிகோ விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவரைத் கைது செய்து, அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement