கொழும்பு - கொஹுவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சீனப் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேக நபரைப் பற்றிய தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 23ஆம் திகதி கொஹுவல, கென்ட் ரெசிடென்ஸ் (Kent Residence) குடியிருப்பின் இரண்டாவது மாடியில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த சீன நாட்டுப் பெண் ஒருவர், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக கல்கிஸ்ஸை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் உயிரிழந்த பெண்ணின் முன்னாள் காதலரான சீன நாட்டவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சந்தேக நபரின் விபரங்கள்
பெயர்: வாங் ஹுய்யின்(WANG HUIYIN)
பிறந்த திகதி: 2000.06.01
கடவுச்சீட்டு இலக்கங்கள்: EE6791329 / ER3805969
சந்தேக நபரின் இடது கையின் விரல்களில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் ஏதேனும் கிடைத்தால் 071 – 8596408 மற்றும் 071 - 8591669 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சீனப் பெண் கொலை: சந்தேக நபரை பிடிக்க பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார் கொழும்பு - கொஹுவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சீனப் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேக நபரைப் பற்றிய தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கடந்த 23ஆம் திகதி கொஹுவல, கென்ட் ரெசிடென்ஸ் (Kent Residence) குடியிருப்பின் இரண்டாவது மாடியில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த சீன நாட்டுப் பெண் ஒருவர், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக கல்கிஸ்ஸை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தக் கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் உயிரிழந்த பெண்ணின் முன்னாள் காதலரான சீன நாட்டவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.சந்தேக நபரின் விபரங்கள்பெயர்: வாங் ஹுய்யின்(WANG HUIYIN)பிறந்த திகதி: 2000.06.01கடவுச்சீட்டு இலக்கங்கள்: EE6791329 / ER3805969சந்தேக நபரின் இடது கையின் விரல்களில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் ஏதேனும் கிடைத்தால் 071 – 8596408 மற்றும் 071 - 8591669 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.