• Mar 28 2026

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது!

Ziya / Mar 27th 2026, 4:19 pm
image

வங்கிகளில் பணத்தை வைப்பிலிட்டு நூதனமான முறையில் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் நீண்டகாலமாக ஈடுபட்ட இருவர் இன்றையதினம் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டனர்.


வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் வடமாகாண குற்ற விசாரணை பிரிவினரால் இருவர் கிளிநொச்சி திருநகரில் கைதுசெய்யப்பட்டனர்.


நீண்ட காலமாக வங்கி கணக்கில் பணத்தை வைப்பிலிடுபவர்களின் இடங்களுக்கே போதைப்பொருளை அனுப்பி நூதன முறையில் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவரே கைது செய்யப்பட்டனர்.


சந்தேக நபர்களிடம் இருந்து 13 கிராம் 500 மில்லி கிராம் ஹெரோயின், வாள், கையடக்க தொலைபேசிகள், வங்கி அட்டைகள், பணம் என்பனவும் கைப்பற்றப்பட்டது.


மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான சந்தேக நபர்களை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது வங்கிகளில் பணத்தை வைப்பிலிட்டு நூதனமான முறையில் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் நீண்டகாலமாக ஈடுபட்ட இருவர் இன்றையதினம் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டனர்.வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் வடமாகாண குற்ற விசாரணை பிரிவினரால் இருவர் கிளிநொச்சி திருநகரில் கைதுசெய்யப்பட்டனர்.நீண்ட காலமாக வங்கி கணக்கில் பணத்தை வைப்பிலிடுபவர்களின் இடங்களுக்கே போதைப்பொருளை அனுப்பி நூதன முறையில் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவரே கைது செய்யப்பட்டனர்.சந்தேக நபர்களிடம் இருந்து 13 கிராம் 500 மில்லி கிராம் ஹெரோயின், வாள், கையடக்க தொலைபேசிகள், வங்கி அட்டைகள், பணம் என்பனவும் கைப்பற்றப்பட்டது.மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான சந்தேக நபர்களை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement