பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் ‘சிசு செரிய’ பஸ் சேவையின் வடமாகாண ஆரம்ப நிகழ்வு இன்று (15) வவுனியாவில் நடைபெற்றது.
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமை தாங்கினார்.
வட மாகாணத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இதுவரை ‘சிசு செரிய’ பஸ் சேவை நடைமுறையில் இருக்காத நிலையில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு இணைந்து முதற்கட்டமாக 20 ‘சிசு செரிய’ பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளன.
நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர், நாடு முழுவதும் மாணவர்களின் போக்குவரத்துத் தேவையை பூர்த்தி செய்ய 200-க்கும் மேற்பட்ட புதிய பஸ்களை ‘சிசு செரிய’ சேவையில் இணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்காக சுமார் ஒரு பில்லியன் ரூபாவிற்கு அண்மித்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘சிசு செரிய’ சேவை, இதுவரை வடபகுதி மாணவர்களுக்கு கிடைக்காதிருந்ததாகவும், இதற்கு முன்னர் மாணவர்களின் போக்குவரத்து பொதுப் போக்குவரத்து சேவையுடன் இணைந்தே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சேவையின் கீழ் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பயனடைவதுடன், மாணவர்களிடம் அரைக்கட்டணம் மட்டுமே அறவிடப்படும். மீதமுள்ள செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். திலகநாதன், ம. ஜெகதீஸ்வரன், வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் எஸ். விமலேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
21 ஆண்டுகளுக்குப் பிறகு வடக்கை வந்தடைந்த ‘சிசு செரிய’ - அரைக்கட்டணத்தில் பயணம் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் ‘சிசு செரிய’ பஸ் சேவையின் வடமாகாண ஆரம்ப நிகழ்வு இன்று (15) வவுனியாவில் நடைபெற்றது.வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமை தாங்கினார்.வட மாகாணத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இதுவரை ‘சிசு செரிய’ பஸ் சேவை நடைமுறையில் இருக்காத நிலையில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு இணைந்து முதற்கட்டமாக 20 ‘சிசு செரிய’ பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளன.நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர், நாடு முழுவதும் மாணவர்களின் போக்குவரத்துத் தேவையை பூர்த்தி செய்ய 200-க்கும் மேற்பட்ட புதிய பஸ்களை ‘சிசு செரிய’ சேவையில் இணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்காக சுமார் ஒரு பில்லியன் ரூபாவிற்கு அண்மித்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘சிசு செரிய’ சேவை, இதுவரை வடபகுதி மாணவர்களுக்கு கிடைக்காதிருந்ததாகவும், இதற்கு முன்னர் மாணவர்களின் போக்குவரத்து பொதுப் போக்குவரத்து சேவையுடன் இணைந்தே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த சேவையின் கீழ் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பயனடைவதுடன், மாணவர்களிடம் அரைக்கட்டணம் மட்டுமே அறவிடப்படும். மீதமுள்ள செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டது.இந்நிகழ்வில் வன்னி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். திலகநாதன், ம. ஜெகதீஸ்வரன், வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் எஸ். விமலேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.