• Mar 11 2025

'கிளீன் சிறீலங்காவும் பாலின சமத்துவமும்' வவுனியாவில் கண்காட்சியும் போட்டி நிகழ்வும்..!

Sharmi / Mar 10th 2025, 12:52 pm
image

கிளீன் சிறீலங்காவும் பாலின சமத்துவமும் எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு வவுனியா காமிணி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக கண்காட்சியும் போட்டி நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், பிரதேச செயலாளர் காஞ்சன குமாரவின் தலைமையில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.சுபாசினியின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினர்களாக வவுனியா மாவட்ட செயலாளர் சரத்தசந்திர, மேலதிக மாவட்ட செயலாளர் தி.திரேஸ்குமார், நா.கமலதாசன் (காணி) ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தனர்.

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளிற்கிடையேயான குறித்த குறித்த கண்காட்சி மற்றும் போட்டி நிகழ்வில்  கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டம் தொடர்பாகவும் பெண்களிற்கு எதிரான வன்முறைகள் மற்றும் அது தொடர்பான ஒவியங்களும், சாதனை பெண்கள் தொடர்பான படங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை   குறிப்பிடத்தக்கது.




'கிளீன் சிறீலங்காவும் பாலின சமத்துவமும்' வவுனியாவில் கண்காட்சியும் போட்டி நிகழ்வும். கிளீன் சிறீலங்காவும் பாலின சமத்துவமும் எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு வவுனியா காமிணி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக கண்காட்சியும் போட்டி நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், பிரதேச செயலாளர் காஞ்சன குமாரவின் தலைமையில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.சுபாசினியின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினர்களாக வவுனியா மாவட்ட செயலாளர் சரத்தசந்திர, மேலதிக மாவட்ட செயலாளர் தி.திரேஸ்குமார், நா.கமலதாசன் (காணி) ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தனர்.வவுனியா மாவட்டத்தை சேர்ந்த அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளிற்கிடையேயான குறித்த குறித்த கண்காட்சி மற்றும் போட்டி நிகழ்வில்  கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டம் தொடர்பாகவும் பெண்களிற்கு எதிரான வன்முறைகள் மற்றும் அது தொடர்பான ஒவியங்களும், சாதனை பெண்கள் தொடர்பான படங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை   குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement