• Jul 26 2025

கனடாவில் இருந்து யாழ். வந்த குடும்பஸ்தருக்கு நடந்த சோகம்

Chithra / Jul 25th 2025, 7:51 am
image


கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இதன்போது யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் இருந்து பி.மரியதாசன்  என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம்  குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபரின் மூன்று பிள்ளைகளும் மனைவியும் கனடாவில் உள்ள நிலையில், இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து அவரது மச்சான் முறையானவருடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தவேளை நேற்று உயிரிழந்துள்ளார். 

நேற்று பிற்பகல் அவரது வீட்டுக்கு சென்ற மச்சான் அவர் சடலமாக இருப்பதை அவதானித்த நிலையில் 

யாழ்ப்பாணம் பொலிஸாராருக்கு தகவல் வழங்கினார்.

அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். 

சாட்சிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

கனடாவில் இருந்து யாழ். வந்த குடும்பஸ்தருக்கு நடந்த சோகம் கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் இருந்து பி.மரியதாசன்  என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சம்பவம்  குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபரின் மூன்று பிள்ளைகளும் மனைவியும் கனடாவில் உள்ள நிலையில், இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து அவரது மச்சான் முறையானவருடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தவேளை நேற்று உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் அவரது வீட்டுக்கு சென்ற மச்சான் அவர் சடலமாக இருப்பதை அவதானித்த நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாராருக்கு தகவல் வழங்கினார்.அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement