இன்று (22)உலக சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் ரொபர்ட் பேடன் பவுல் பிரபுவின் பிறந்த தினமாகும்.இதனையொட்டி, திருகோணமலை மாவட்டத்தில், கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டம் முன்னெடுக்கப்ட்டு வருகின்றதது
கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டத்திற்கு அமைய, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள, மூன்று பிரதான புகையிரத நிலையங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன.
இதன் போது திருகோணமலை, சீனக்குடா மற்றும் தம்பலகாமம் ஆகிய புகையிரத நிலையங்கள் பாரிய சிரமதானத்தின் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்வுகளில், 325 சாரணர்கள், 45 பெற்றோர்கள், 20 பாடசாலை அதிபர்கள், சென் ஜோன்ஸ் அம்பியூபீலன்ஸ் மற்றும் புகையிரத நிலைய ஊழியர்கள் இந்த வேலை திட்டத்தில் இணைந்திருந்தனர்.
இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கே. குணாநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும், இலங்கை சாரணர் சங்கம் பிரதம ஆணையாளர் ஜனத்பிரீத் பெர்னாண்டோ, உதவி பிரதம ஆணையாளர்களான அன்ரூ விஜேசூரிய மற்றும் பிரபாத் குலரத்தின ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
பிரதம ஆணையாளர் ஜனத்பிரீத் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை உயிர் கொடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு இலங்கை சாரணர்களுக்கு உரித்தானது. ஜனாதிபதியின் சிந்தனை 68 வருடங்களுக்கு முன்னர் ரொபர்ட் பேடன் பவுல் பிரபுவின் சிந்தனை உதித்த கருத்துட்டமாகும். அதைத்தான் உலகம் முழுவதும் இந்த சாரணங்கள் செய்து கொண்டு வருகின்றார்கள்.
எனவே, ஜனாதிபதியின் சிந்தனைக்கு நாங்கள் புகைரத நிலையங்களையும், 50 வைத்தியசாலைகளையும் 50 பேருந்து நிலையங்களையும் தூய்மைப்படுத்த இலங்கை சாரணர் தீர்மானித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மாவட்ட புகையிரதத் திணைக்கள பொது முகாமையாளர், மாவட்ட சாரணர் சங்க ஆணையாளர் உள்ளிட்ட, உயர் அதிகாரிகளும் பங்குபற்றிருந்தனர்.
ரொபர்ட் பேடன் பிறந்ததினத்தையொட்டி திருகோணமலையில் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டம் இன்று (22)உலக சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் ரொபர்ட் பேடன் பவுல் பிரபுவின் பிறந்த தினமாகும்.இதனையொட்டி, திருகோணமலை மாவட்டத்தில், கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டம் முன்னெடுக்கப்ட்டு வருகின்றதது கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டத்திற்கு அமைய, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள, மூன்று பிரதான புகையிரத நிலையங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன.இதன் போது திருகோணமலை, சீனக்குடா மற்றும் தம்பலகாமம் ஆகிய புகையிரத நிலையங்கள் பாரிய சிரமதானத்தின் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டன.இந்த நிகழ்வுகளில், 325 சாரணர்கள், 45 பெற்றோர்கள், 20 பாடசாலை அதிபர்கள், சென் ஜோன்ஸ் அம்பியூபீலன்ஸ் மற்றும் புகையிரத நிலைய ஊழியர்கள் இந்த வேலை திட்டத்தில் இணைந்திருந்தனர்.இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கே. குணாநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.மேலும், இலங்கை சாரணர் சங்கம் பிரதம ஆணையாளர் ஜனத்பிரீத் பெர்னாண்டோ, உதவி பிரதம ஆணையாளர்களான அன்ரூ விஜேசூரிய மற்றும் பிரபாத் குலரத்தின ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். பிரதம ஆணையாளர் ஜனத்பிரீத் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில்,ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை உயிர் கொடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு இலங்கை சாரணர்களுக்கு உரித்தானது. ஜனாதிபதியின் சிந்தனை 68 வருடங்களுக்கு முன்னர் ரொபர்ட் பேடன் பவுல் பிரபுவின் சிந்தனை உதித்த கருத்துட்டமாகும். அதைத்தான் உலகம் முழுவதும் இந்த சாரணங்கள் செய்து கொண்டு வருகின்றார்கள். எனவே, ஜனாதிபதியின் சிந்தனைக்கு நாங்கள் புகைரத நிலையங்களையும், 50 வைத்தியசாலைகளையும் 50 பேருந்து நிலையங்களையும் தூய்மைப்படுத்த இலங்கை சாரணர் தீர்மானித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.மாவட்ட புகையிரதத் திணைக்கள பொது முகாமையாளர், மாவட்ட சாரணர் சங்க ஆணையாளர் உள்ளிட்ட, உயர் அதிகாரிகளும் பங்குபற்றிருந்தனர்.