கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான துலான் சஞ்சய் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்க விரும்புவதாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
துலான் சஞ்சய் உள்ளிட்ட 7 சந்தேகநபர்களும் இன்று (22) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் துலான் சஞ்சய் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நுவன் ஜயவர்தன, தனது கட்சிக்காரரிடம் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கவுள்ளதாக நீதிமன்றில் அறிவித்தார்.
சந்தேகநபரிடம் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கும் போது நீதிமன்றில் உள்ள நிபந்தனைகள் தொடர்பில் விளக்கமளித்த நீதவான் சனிமா விஜேபண்டார, அந்த நிபந்தனைகளின் அடிப்படையில் இரகசிய வாக்குமூலத்தை வழங்க சம்மதித்தால் பிற்பகல் இடைவேளையின் பின்னர் சந்தேகநபரின் இரகசிய வாக்குமூலத்தை வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துரிகிரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 7 சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பச்சை குத்தும் நிலையத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான கிளப் வசந்த உள்ளிட்ட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
கிளப் வசந்த கொலை விவகாரம்: சந்தேகநபரால் வழங்கப்படவுள்ள இரகசிய வாக்குமூலம் கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான துலான் சஞ்சய் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்க விரும்புவதாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.துலான் சஞ்சய் உள்ளிட்ட 7 சந்தேகநபர்களும் இன்று (22) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர் துலான் சஞ்சய் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நுவன் ஜயவர்தன, தனது கட்சிக்காரரிடம் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கவுள்ளதாக நீதிமன்றில் அறிவித்தார்.சந்தேகநபரிடம் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கும் போது நீதிமன்றில் உள்ள நிபந்தனைகள் தொடர்பில் விளக்கமளித்த நீதவான் சனிமா விஜேபண்டார, அந்த நிபந்தனைகளின் அடிப்படையில் இரகசிய வாக்குமூலத்தை வழங்க சம்மதித்தால் பிற்பகல் இடைவேளையின் பின்னர் சந்தேகநபரின் இரகசிய வாக்குமூலத்தை வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.அத்துரிகிரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 7 சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பச்சை குத்தும் நிலையத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான கிளப் வசந்த உள்ளிட்ட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.