• Sep 08 2024

டயர் களஞ்சியசாலையில் திடீர் தீ பரவல்!

Chithra / Jul 22nd 2024, 1:20 pm
image

Advertisement



ஊவா பரணகம, ஊமா எல பிரதேசத்தில் உள்ள டயர் களஞ்சியசாலை ஒன்றில் இன்று (22) திங்கட்கிழமை பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக அம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவித்தனர்.

மூடப்பட்டிருந்த டயர் களஞ்சியசாலையிலேயே இவ்வாறு தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை மாநகர சபையின் தீயணைப்பு படையினர், அம்பகஸ்தோவ பொலிஸார் மற்றும் ஊவா பரணகம பிரதேச செயலகம் ஆகியோர் இணைந்து  இந்த தீ பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத  நிலையில் மின்சார கசிவு காரணமாக தீ பரவல் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த தீ பரவலினால் டயர் களஞ்சியசாலையில் இருந்த பெரும்பாலான டயர்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


டயர் களஞ்சியசாலையில் திடீர் தீ பரவல் ஊவா பரணகம, ஊமா எல பிரதேசத்தில் உள்ள டயர் களஞ்சியசாலை ஒன்றில் இன்று (22) திங்கட்கிழமை பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக அம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவித்தனர்.மூடப்பட்டிருந்த டயர் களஞ்சியசாலையிலேயே இவ்வாறு தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பண்டாரவளை மாநகர சபையின் தீயணைப்பு படையினர், அம்பகஸ்தோவ பொலிஸார் மற்றும் ஊவா பரணகம பிரதேச செயலகம் ஆகியோர் இணைந்து  இந்த தீ பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத  நிலையில் மின்சார கசிவு காரணமாக தீ பரவல் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.இந்த தீ பரவலினால் டயர் களஞ்சியசாலையில் இருந்த பெரும்பாலான டயர்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement