• Nov 23 2024

கிளப் வசந்த கொலை விவகாரம்: அரசியல் பிரமுகர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்..!

Chithra / Jul 12th 2024, 9:13 am
image

 

அதுருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கிலப் வசந்த என்ற வசந்த சுரேந்திர பெரேராவுடன் தொடர்புடைய அமைச்சர்கள் தொடர்பிலும் பொலிஸாரினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளை கொண்ட விசேட குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிளப் வசந்தவுடன் தொடர்புடைய பல அரசியல் பிரமுகர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இந்த நாட்களில் கிளப் வசந்தாவின் புகைப்படங்களை பயன்படுத்தி சில அமைச்சர்களை கொச்சைப்படுத்தும் வகையில் போலியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதாகவும், 

இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, அத்துருகிரியவில் சுட்டுக்கொல்லப்பட்ட ‘கிளப் வசந்த’ நாடாளுமன்றத்தில் இருப்பவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தனது நண்பர்கள் என்று தெரிவித்திருந்ததாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துருகிரிய பிரதேசத்தில் (08) திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கிளப் வசந்த உள்ளிட்ட மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், கிளப் வசந்தவின் மனைவி மற்றும் பாடகி சுஜீவா உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கிளப் வசந்த கொலை விவகாரம்: அரசியல் பிரமுகர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.  அதுருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கிலப் வசந்த என்ற வசந்த சுரேந்திர பெரேராவுடன் தொடர்புடைய அமைச்சர்கள் தொடர்பிலும் பொலிஸாரினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளை கொண்ட விசேட குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிளப் வசந்தவுடன் தொடர்புடைய பல அரசியல் பிரமுகர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.இந்த நாட்களில் கிளப் வசந்தாவின் புகைப்படங்களை பயன்படுத்தி சில அமைச்சர்களை கொச்சைப்படுத்தும் வகையில் போலியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதேவேளை, அத்துருகிரியவில் சுட்டுக்கொல்லப்பட்ட ‘கிளப் வசந்த’ நாடாளுமன்றத்தில் இருப்பவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தனது நண்பர்கள் என்று தெரிவித்திருந்ததாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.அத்துருகிரிய பிரதேசத்தில் (08) திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கிளப் வசந்த உள்ளிட்ட மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், கிளப் வசந்தவின் மனைவி மற்றும் பாடகி சுஜீவா உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement