• Jan 13 2025

மார்ச் வரை நீடிக்கும் தேங்காய் தட்டுப்பாடு - விலையும் உயரும்..!

Chithra / Dec 29th 2024, 12:11 pm
image

 

எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் தேங்காய் விலையில் மாற்றம் இல்லை என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் வரையில் தேங்காய் விளைச்சல் கிடைக்காது என்ற காரணத்தினால் தொடர்ந்தும் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க  குறிப்பிட்டுள்ளார்.

கைத்தொழில் துறைக்கும் நுகர்வுக்கும் தேங்காய் விநியோகம் செய்வதில் சிரமங்கள் நிலவி வருவதாகவும் இதனால் தொடர்ந்தும் தேங்காய் விலை உயர்வடைந்து செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேங்காய் விளைச்சல் கிடைக்கும் வரையில் இந்த நிலைமை நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் நிலைமைக்கு தீர்வு வழங்கும் நோக்கில் அரசாங்கத்திற்கு சொந்தமான தென்னந்தோப்புகளில் விளையும் தேங்காய்களை சதொச நிறுவனம் ஊடாக நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்  தெரிவித்துள்ளார். 

மார்ச் வரை நீடிக்கும் தேங்காய் தட்டுப்பாடு - விலையும் உயரும்.  எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் தேங்காய் விலையில் மாற்றம் இல்லை என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.மார்ச் மாதம் வரையில் தேங்காய் விளைச்சல் கிடைக்காது என்ற காரணத்தினால் தொடர்ந்தும் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க  குறிப்பிட்டுள்ளார்.கைத்தொழில் துறைக்கும் நுகர்வுக்கும் தேங்காய் விநியோகம் செய்வதில் சிரமங்கள் நிலவி வருவதாகவும் இதனால் தொடர்ந்தும் தேங்காய் விலை உயர்வடைந்து செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தேங்காய் விளைச்சல் கிடைக்கும் வரையில் இந்த நிலைமை நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.தற்போது நிலவும் நிலைமைக்கு தீர்வு வழங்கும் நோக்கில் அரசாங்கத்திற்கு சொந்தமான தென்னந்தோப்புகளில் விளையும் தேங்காய்களை சதொச நிறுவனம் ஊடாக நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்  தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement