ஹங்குரன்கெத்த, உடகலஉட பிரதேசத்தில் நாகப்பாம்பு தீண்டியதால் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவனின் பெற்றோர் வயலில் வேலை செய்துகொண்டிருந்த வேளையில், அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை நாகப்பாம்பு தீண்டியுள்ளது.
இதனால் சிறுவனின் காலில் ஏற்பட்ட காயத்துக்கு உடனடியாக கைவைத்தியம் செய்யப்பட்டது.
எனினும், அது பலனளிக்காத காரணத்தால் பெற்றோர் ரிகிலகஸ்கட வைத்தியசாலையில் சிறுவனை அனுமதித்துள்ளனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி சிறுவன் வைத்தியசாலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவனுக்கு அளிக்கப்பட்ட கைவைத்தியத்தின்போது விஷம் மேல் ஏறாமல் இருப்பதற்காக, இறுக்கமாக கட்டு போடப்பட்ட காரணத்தினால் இரத்த ஓட்டம் தடைப்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உரிய வேளையில் சரியான முறையில் சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் சிறுவனைக் காப்பாற்றியிருக்க முடியும் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.
நாகபாம்பு தீண்டி 4 வயது சிறுவன் பலி ஹங்குரன்கெத்த, உடகலஉட பிரதேசத்தில் நாகப்பாம்பு தீண்டியதால் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சிறுவனின் பெற்றோர் வயலில் வேலை செய்துகொண்டிருந்த வேளையில், அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை நாகப்பாம்பு தீண்டியுள்ளது.இதனால் சிறுவனின் காலில் ஏற்பட்ட காயத்துக்கு உடனடியாக கைவைத்தியம் செய்யப்பட்டது. எனினும், அது பலனளிக்காத காரணத்தால் பெற்றோர் ரிகிலகஸ்கட வைத்தியசாலையில் சிறுவனை அனுமதித்துள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி சிறுவன் வைத்தியசாலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.சிறுவனுக்கு அளிக்கப்பட்ட கைவைத்தியத்தின்போது விஷம் மேல் ஏறாமல் இருப்பதற்காக, இறுக்கமாக கட்டு போடப்பட்ட காரணத்தினால் இரத்த ஓட்டம் தடைப்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.உரிய வேளையில் சரியான முறையில் சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் சிறுவனைக் காப்பாற்றியிருக்க முடியும் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.