மன்னார் பஜார் பகுதியில் 'சம உரிமைகளை வெல்வோம்; இனவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவோம்' எனும் தொனிப்பொருளில் வடிவமைக்கப்பட்ட எதிர்ப்புப் பதாதையில் பொதுமக்கள் இன்று கையொப்பமிட்டனர்.
இந்த கையொப்பம் சேகரிக்கும் நிகழ்வினை சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது “காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கு”, “இன்னொரு அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம்”,
“பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக இரத்து செய்”, “அனைத்து தேசிய இனங்களுக்கு சம உரிமைகளை உறுதி செய்யும் அரசியல் அமைப்பிற்காக போராடுவோம்” உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, பொதுமக்கள் இந்த எதிர்ப்புப் பதாதையில் கையொப்பம் இட்டனர்.
இதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்து, தமது கையொப்பத்தை பதிவு செய்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கு வலியுறுத்தில் மன்னாரில் கையொப்பம் சேகரிப்பு மன்னார் பஜார் பகுதியில் 'சம உரிமைகளை வெல்வோம்; இனவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவோம்' எனும் தொனிப்பொருளில் வடிவமைக்கப்பட்ட எதிர்ப்புப் பதாதையில் பொதுமக்கள் இன்று கையொப்பமிட்டனர்.இந்த கையொப்பம் சேகரிக்கும் நிகழ்வினை சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.இதன்போது “காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கு”, “இன்னொரு அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம்”, “பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக இரத்து செய்”, “அனைத்து தேசிய இனங்களுக்கு சம உரிமைகளை உறுதி செய்யும் அரசியல் அமைப்பிற்காக போராடுவோம்” உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, பொதுமக்கள் இந்த எதிர்ப்புப் பதாதையில் கையொப்பம் இட்டனர்.இதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்து, தமது கையொப்பத்தை பதிவு செய்தனர்.