• Jan 23 2025

கொழும்பு நோக்கி 49 பயணிகளுடன் பயணித்த பேருந்து விபத்து - பலர் வைத்தியசாலையில் அனுமதி

Chithra / Jan 20th 2025, 7:59 am
image

 

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவில் சேருநுவர - கந்தளாய் வீதியில் உள்ள கல்லாறு இராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள வளைவுக்கு அருகில் இன்று காலை பேருந்தொன்று விபத்துக்குள்ளானது.

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேருந்தொன்றே விபத்துக்குள்ளானது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பேருந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதி, கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெறும் போது பஸ்ஸில் சுமார் 49 பயணிகள் இருந்துள்ளனர். 

மேலும் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 14 பயணிகள் விபத்தைத் தொடர்ந்து சிகிச்சைக்காக சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

பின்னர், சாரதி மற்றும் 9 பயணிகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் சாரதியின் கவனயீனமே என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு நோக்கி 49 பயணிகளுடன் பயணித்த பேருந்து விபத்து - பலர் வைத்தியசாலையில் அனுமதி  திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவில் சேருநுவர - கந்தளாய் வீதியில் உள்ள கல்லாறு இராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள வளைவுக்கு அருகில் இன்று காலை பேருந்தொன்று விபத்துக்குள்ளானது.காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேருந்தொன்றே விபத்துக்குள்ளானது.நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பேருந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதி, கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்து இடம்பெறும் போது பஸ்ஸில் சுமார் 49 பயணிகள் இருந்துள்ளனர். மேலும் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 14 பயணிகள் விபத்தைத் தொடர்ந்து சிகிச்சைக்காக சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், சாரதி மற்றும் 9 பயணிகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.விபத்துக்கான காரணம் சாரதியின் கவனயீனமே என விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement