• Nov 21 2024

தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள்

Chithra / Nov 21st 2024, 1:16 pm
image

 மாவீரர் வாரத்தின் முதல் நாளான இன்று விசுவமடுவில் உள்ள தேராவில் மாவீரர் துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

மாவீரர் நாளை நினைவுகூரும் வகையில், நவம்பர் 21 ஆம் நாள் மாவீரர் வாரம் ஆரம்பமாகும். இந்நாட்களில் தமிழ் மக்களால் வணக்க நிகழ்வுகள் மேற்கொள்ளப்படும்.

இறுதி மாவீரர் நிகழ்வுகள் நவம்பர் 27 ஆம் திகதி நடைபெறும். அந்நாளில் தமிழ் மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி ஈகைச்சுடர் ஏற்றுவர்.

பொதுவாக, தாயகத்தில் மாவீரர் வாரம் முழுவதும் மஞ்சள் சிவப்பு நிறக் கொடிகள் பறக்கவிட்டு, மாவீரர்களுக்கான பாடல்கள் ஒலிக்கவிட்டு துயிலும் இல்லங்களில் வணக்க நிகழ்வுகள் நடத்தப்படுவது வழக்கம். அதேபோல், புலம்பெயர் தேசங்களிலும் இவ்வகையான வணக்க நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.


தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள்  மாவீரர் வாரத்தின் முதல் நாளான இன்று விசுவமடுவில் உள்ள தேராவில் மாவீரர் துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர் நாளை நினைவுகூரும் வகையில், நவம்பர் 21 ஆம் நாள் மாவீரர் வாரம் ஆரம்பமாகும். இந்நாட்களில் தமிழ் மக்களால் வணக்க நிகழ்வுகள் மேற்கொள்ளப்படும்.இறுதி மாவீரர் நிகழ்வுகள் நவம்பர் 27 ஆம் திகதி நடைபெறும். அந்நாளில் தமிழ் மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி ஈகைச்சுடர் ஏற்றுவர்.பொதுவாக, தாயகத்தில் மாவீரர் வாரம் முழுவதும் மஞ்சள் சிவப்பு நிறக் கொடிகள் பறக்கவிட்டு, மாவீரர்களுக்கான பாடல்கள் ஒலிக்கவிட்டு துயிலும் இல்லங்களில் வணக்க நிகழ்வுகள் நடத்தப்படுவது வழக்கம். அதேபோல், புலம்பெயர் தேசங்களிலும் இவ்வகையான வணக்க நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement