• Dec 27 2024

மதுபானசாலை அனுமதிப்பத்திர அமைவிட அறிக்கை தயாரிக்க குழு நியமனம்

Chithra / Dec 26th 2024, 2:28 pm
image

 

கிளிநொச்சியில் மதுபானசாலை அனுமதிப்பத்திர அமைவிடம் தொடர்பில் அறிக்கை ஒன்றை தயாரிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இன்றைய தினம் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் நகர திட்டமிடலுக்கு இடையூறாகவும், அதிகளவிலும் மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டு மக்களிற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் நாடாளமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவால் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் சிபாரிசு வழங்கியவர்களின் விடயத்தை வெளியிட வேண்டும் எனவும், மதுபான சாலை அனுமதிகளுக்கு பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனால் தெரிவிக்கப்பட்டது.

குறித்த பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும், மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டால் மாத்திரமே குறித்த விடயத்தை கையாள முடியும் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.

மதுபான நிலையங்களை உடனடியாக மூடுவதெனில் சட்ட சிக்கல்கள் ஏற்படும். ஆகவே அது தொடர்பில் அறிக்கை தயாரிக்க வேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன் தெரிவித்தார். இந்த விடயத்தை ஆராய்வதற்கு குழு ஒன்றை அமைக்க தான் மும்மொழிவதாக சிறிதரன் தெரிவித்தார். அதனை அர்ச்சுனா வழி மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மதுபானசாலை அனுமதிப்பத்திர அமைவிட அறிக்கை தயாரிக்க குழு நியமனம்  கிளிநொச்சியில் மதுபானசாலை அனுமதிப்பத்திர அமைவிடம் தொடர்பில் அறிக்கை ஒன்றை தயாரிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இன்றைய தினம் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தின் நகர திட்டமிடலுக்கு இடையூறாகவும், அதிகளவிலும் மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டு மக்களிற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் நாடாளமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவால் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.குறித்த விடயம் தொடர்பில் சிபாரிசு வழங்கியவர்களின் விடயத்தை வெளியிட வேண்டும் எனவும், மதுபான சாலை அனுமதிகளுக்கு பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனால் தெரிவிக்கப்பட்டது.குறித்த பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும், மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டால் மாத்திரமே குறித்த விடயத்தை கையாள முடியும் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.மதுபான நிலையங்களை உடனடியாக மூடுவதெனில் சட்ட சிக்கல்கள் ஏற்படும். ஆகவே அது தொடர்பில் அறிக்கை தயாரிக்க வேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன் தெரிவித்தார். இந்த விடயத்தை ஆராய்வதற்கு குழு ஒன்றை அமைக்க தான் மும்மொழிவதாக சிறிதரன் தெரிவித்தார். அதனை அர்ச்சுனா வழி மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement