• Dec 27 2024

களு கங்கையில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் சடலமாக மீட்பு

Chithra / Dec 26th 2024, 2:36 pm
image



களு கங்கையில் பானை கழுவச் சென்ற பெண் ஒருவரை முதலை பிடித்து இழுத்துச் சென்றதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

தொடங்கொட கொஹலன வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய பெண் ஒருவரையே இவ்வாறு முதலை பிடித்து இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுத்துறை கொஹொலன பிரதேசத்தில் களு கங்கைக்கு அருகில் குறித்த பெண் முதலையால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலை இழுத்துச் சென்றப் பெண்ணை படகுகள் மூலம் பிரதேச மக்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னரே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


களு கங்கையில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் சடலமாக மீட்பு களு கங்கையில் பானை கழுவச் சென்ற பெண் ஒருவரை முதலை பிடித்து இழுத்துச் சென்றதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.தொடங்கொட கொஹலன வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய பெண் ஒருவரையே இவ்வாறு முதலை பிடித்து இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.களுத்துறை கொஹொலன பிரதேசத்தில் களு கங்கைக்கு அருகில் குறித்த பெண் முதலையால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முதலை இழுத்துச் சென்றப் பெண்ணை படகுகள் மூலம் பிரதேச மக்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னரே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement