• Apr 15 2026

அரகலய' பின்னணி குறித்து ஆணைக்குழு விசாரணை: நாமல் எம்.பி! - வன்முறையைத் தூண்டியதே ராஜபக்ஷக்கள்தான் என அமைச்சர் வசந்த பதிலடி

Chithra / Feb 15th 2026, 9:32 am
image



இலங்கையில் கடந்த 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற 'அரகலய' மக்கள் போராட்டம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள சக்திகள் குறித்து, எதிர்கால பொதுஜன பெரமுன ஆட்சியில் ஜனாதிபதி ஆணைக்குழு மூலம் விசாரணை நடத்தப்படும் என நாமல் ராஜபக்ஷ எம்.பி தெரிவித்துள்ளார். இதற்கு அமைச்சர் வசந்த சமரசிங்க கடும் கண்டனத்தையும் பதிலடியையும் வழங்கியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டார்.

அரகலய போராட்டத்திற்காக வெளிநாடுகளில் இருந்து பெருமளவிலான பணம் கிடைத்துள்ளது. இதன் பின்னணியில் உள்ள சக்திகள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும்.

ஜே.வி.பி (JVP) தனது அரசியல் லாபத்திற்காக இளைஞர்களின் வாழ்க்கையைப் பணயம் வைக்கும் தந்திரோபாயத்தை 1988 முதலே கடைப்பிடித்து வருகிறது. எதிர்காலத்தில் அமையவுள்ள தமது ஆட்சியில், இதற்கென விசேட ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு உண்மைகள் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும்.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், ஊழலுக்கு எதிராகப் பேசுபவர்களே ஊழலில் ஈடுபடுவதாகவும் அவர் சாடினார்.

நாமலின் கருத்துக்குப் பதிலளித்த அமைச்சர் வசந்த சமரசிங்க, போராட்டத்தை வன்முறையாக மாற்றியதே ராஜபக்ஷக்கள்தான் எனக் குற்றம் சாட்டினார்:

அரகலய ஆரம்பத்தில் அமைதியாகவே நடந்தது. ஆனால், ராஜபக்ஷ தரப்பினர் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய பின்னரே அது வன்முறையாக மாறியது. பொருளாதார நெருக்கடியால் வீதிக்கு வந்த மக்களை "வெளிநாட்டுச் சதி" என்று கூறுவது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.

கடந்த கால ஊழல்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது ஏவப்பட்ட வன்முறைகள் குறித்து எமது அரசு முறையான விசாரணைகளை முன்னெடுக்கும்.சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்துவோம்" என அமைச்சர் வசந்த இதன்போது திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஒரே விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்பும் எதிர்க்கத் தரப்பும் (பொதுஜன பெரமுன) நேர் எதிர் துருவங்களில் நின்று கருத்து மோதல்களில் ஈடுபட்டுள்ளமை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அரகலய' பின்னணி குறித்து ஆணைக்குழு விசாரணை: நாமல் எம்.பி - வன்முறையைத் தூண்டியதே ராஜபக்ஷக்கள்தான் என அமைச்சர் வசந்த பதிலடி இலங்கையில் கடந்த 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற 'அரகலய' மக்கள் போராட்டம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள சக்திகள் குறித்து, எதிர்கால பொதுஜன பெரமுன ஆட்சியில் ஜனாதிபதி ஆணைக்குழு மூலம் விசாரணை நடத்தப்படும் என நாமல் ராஜபக்ஷ எம்.பி தெரிவித்துள்ளார். இதற்கு அமைச்சர் வசந்த சமரசிங்க கடும் கண்டனத்தையும் பதிலடியையும் வழங்கியுள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டார்.அரகலய போராட்டத்திற்காக வெளிநாடுகளில் இருந்து பெருமளவிலான பணம் கிடைத்துள்ளது. இதன் பின்னணியில் உள்ள சக்திகள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும்.ஜே.வி.பி (JVP) தனது அரசியல் லாபத்திற்காக இளைஞர்களின் வாழ்க்கையைப் பணயம் வைக்கும் தந்திரோபாயத்தை 1988 முதலே கடைப்பிடித்து வருகிறது. எதிர்காலத்தில் அமையவுள்ள தமது ஆட்சியில், இதற்கென விசேட ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு உண்மைகள் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும்.தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், ஊழலுக்கு எதிராகப் பேசுபவர்களே ஊழலில் ஈடுபடுவதாகவும் அவர் சாடினார்.நாமலின் கருத்துக்குப் பதிலளித்த அமைச்சர் வசந்த சமரசிங்க, போராட்டத்தை வன்முறையாக மாற்றியதே ராஜபக்ஷக்கள்தான் எனக் குற்றம் சாட்டினார்:அரகலய ஆரம்பத்தில் அமைதியாகவே நடந்தது. ஆனால், ராஜபக்ஷ தரப்பினர் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய பின்னரே அது வன்முறையாக மாறியது. பொருளாதார நெருக்கடியால் வீதிக்கு வந்த மக்களை "வெளிநாட்டுச் சதி" என்று கூறுவது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.கடந்த கால ஊழல்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது ஏவப்பட்ட வன்முறைகள் குறித்து எமது அரசு முறையான விசாரணைகளை முன்னெடுக்கும்.சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்துவோம்" என அமைச்சர் வசந்த இதன்போது திட்டவட்டமாகத் தெரிவித்தார்.ஒரே விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்பும் எதிர்க்கத் தரப்பும் (பொதுஜன பெரமுன) நேர் எதிர் துருவங்களில் நின்று கருத்து மோதல்களில் ஈடுபட்டுள்ளமை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement