• Apr 22 2025

யாழ்- நாவாந்துறை வீதியில் கொட்டப்பட்ட கழிவுகளை கூட்டிஅள்ளிய பயணிகள்!

Chithra / Apr 21st 2025, 10:07 am
image

 

காக்கைதீவு, நாவாந்துறை பகுதிகளிலுள்ள வீதிகளில் வீசப்படும் கழிவுகளால் வீதியில் பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் 

நேற்று  அதுபோன்ற அசம்பாவித சம்பவம் ஒன்று நாவாந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

நவாலியிலிருந்து  யாழ்ப்பாணம் செல்லும் வீதியில், மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப்படும் பல போத்தல்கள், உடைந்த நிலையி வீதியில் கொட்டப்பட்டிருந்துள்ளது 

கண்ணாடிப் போத்தல்கள் வீதியில் உடைந்திருந்த காரணத்தினால், வீதியில் பயணித்தவதவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். 

பல வாகனங்களின் ரயர்களை  உடைந்த போத்தல்கள் சேதப்படுத்தியதால் சாரதிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருத்தனர் 

குறித்த விடயத்தை பொதுமகன் ஒருவர் காணொளியாக பதிவு செய்து தனது விசனத்தை தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் வேறு நபருட் இணைந்து குறித்த வீதியில் கொட்டப்பட்டிருந்த கழிவுகளை ஒருபக்கமாக குளைகளால் அகற்றியும் விட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

இக்கழிவுகளால் தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவித்த அவர் மேலும் கழிவுகளை வீசுற யார் எண்டாலும் நல்லா இருங்கடா என கிண்டலாக பதிவிட்டு தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது 

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


யாழ்- நாவாந்துறை வீதியில் கொட்டப்பட்ட கழிவுகளை கூட்டிஅள்ளிய பயணிகள்  காக்கைதீவு, நாவாந்துறை பகுதிகளிலுள்ள வீதிகளில் வீசப்படும் கழிவுகளால் வீதியில் பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் நேற்று  அதுபோன்ற அசம்பாவித சம்பவம் ஒன்று நாவாந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. நவாலியிலிருந்து  யாழ்ப்பாணம் செல்லும் வீதியில், மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப்படும் பல போத்தல்கள், உடைந்த நிலையி வீதியில் கொட்டப்பட்டிருந்துள்ளது கண்ணாடிப் போத்தல்கள் வீதியில் உடைந்திருந்த காரணத்தினால், வீதியில் பயணித்தவதவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். பல வாகனங்களின் ரயர்களை  உடைந்த போத்தல்கள் சேதப்படுத்தியதால் சாரதிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருத்தனர் குறித்த விடயத்தை பொதுமகன் ஒருவர் காணொளியாக பதிவு செய்து தனது விசனத்தை தெரிவித்துள்ளார். மேலும் அவர் வேறு நபருட் இணைந்து குறித்த வீதியில் கொட்டப்பட்டிருந்த கழிவுகளை ஒருபக்கமாக குளைகளால் அகற்றியும் விட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இக்கழிவுகளால் தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவித்த அவர் மேலும் கழிவுகளை வீசுற யார் எண்டாலும் நல்லா இருங்கடா என கிண்டலாக பதிவிட்டு தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement