• Nov 24 2024

டெவோன்-5 மீன்பிடி கப்பலில் உயிரிழந்த மீனவர்களுக்கு நட்டஈடு! அமைச்சர் அறிவிப்பு

Chithra / Jul 2nd 2024, 11:56 am
image

 

டெவோன்-5 பல நாள் மீன்பிடி கப்பலின் தலைவர் உட்பட உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய நட்டஈடு வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடலில் மிதந்த போத்தலில் இருந்து பானத்தினை குடித்ததால் இந்த துரதிர்ஷ்டவசமான உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், 

டெவோன்-5 கப்பலில் உள்ள கப்பலின் பேரிடர் கண்காணிப்பு பொத்தான் இயக்கப்பட்டு பேரிடர் குறித்து அறிவிக்கப்படாதது வேதனையான உண்மை என்றும் அமைச்சர் கூறுகிறார்.

இவ்வாறு அறிவித்திருந்தால் மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள வாய்ப்பு இருந்திருக்கும் என்றும் அமைச்சர் கூறுகிறார்.

Dovon-5 கப்பல் நிலத்திலிருந்து 360 கடல் மைல் தூரம் அதாவது 600 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணித்துள்ளதாகவும், விமானப்படையின் ஹெலிகொப்டர்கள் மூலம் இவ்வளவு தூரம் செல்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்ததாகவும், குறித்த கப்பல் சுமார் ஒரு ஹெலிகாப்டர் சாதாரணமாக பயணிக்கக்கூடிய தூரத்தை விட 04 மடங்கு தூரத்தில் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

டெவோன்-5 மீன்பிடி கப்பலில் உயிரிழந்த மீனவர்களுக்கு நட்டஈடு அமைச்சர் அறிவிப்பு  டெவோன்-5 பல நாள் மீன்பிடி கப்பலின் தலைவர் உட்பட உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய நட்டஈடு வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.கடலில் மிதந்த போத்தலில் இருந்து பானத்தினை குடித்ததால் இந்த துரதிர்ஷ்டவசமான உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், டெவோன்-5 கப்பலில் உள்ள கப்பலின் பேரிடர் கண்காணிப்பு பொத்தான் இயக்கப்பட்டு பேரிடர் குறித்து அறிவிக்கப்படாதது வேதனையான உண்மை என்றும் அமைச்சர் கூறுகிறார்.இவ்வாறு அறிவித்திருந்தால் மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள வாய்ப்பு இருந்திருக்கும் என்றும் அமைச்சர் கூறுகிறார்.Dovon-5 கப்பல் நிலத்திலிருந்து 360 கடல் மைல் தூரம் அதாவது 600 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணித்துள்ளதாகவும், விமானப்படையின் ஹெலிகொப்டர்கள் மூலம் இவ்வளவு தூரம் செல்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்ததாகவும், குறித்த கப்பல் சுமார் ஒரு ஹெலிகாப்டர் சாதாரணமாக பயணிக்கக்கூடிய தூரத்தை விட 04 மடங்கு தூரத்தில் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement