• Apr 02 2025

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக முறைப்பாடுகள் பதிவு

Chithra / Mar 31st 2025, 1:01 pm
image


2025 உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பாக வன்முறைச் செயல்கள் மற்றும் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

அதன்படி, நேற்று (30) களுத்துறை பொலிஸ் பிரிவில் உள்ள அங்கலவத்த பொலிஸ் நிலையத்தில் மிரட்டல்களுடன் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக முறைப்பாடு அளிக்கப்பட்டது, 

மேலும் இது குறித்து அங்கலவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கிடையில், தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் 5 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. 

தலாத்துஓய, தனமல்வில, அளுத்கம, மாத்தளை மற்றும் கலேவெல ஆகிய பொலிஸ் பிரிவுகளிலிருந்து இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக முறைப்பாடுகள் பதிவு 2025 உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பாக வன்முறைச் செயல்கள் மற்றும் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (30) களுத்துறை பொலிஸ் பிரிவில் உள்ள அங்கலவத்த பொலிஸ் நிலையத்தில் மிரட்டல்களுடன் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக முறைப்பாடு அளிக்கப்பட்டது, மேலும் இது குறித்து அங்கலவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் 5 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. தலாத்துஓய, தனமல்வில, அளுத்கம, மாத்தளை மற்றும் கலேவெல ஆகிய பொலிஸ் பிரிவுகளிலிருந்து இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement