எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு முன்னதாக, நேற்றைய (23) தினம் நாட்டின் நான்கு பகுதிகளிலிருந்து தேர்தல் தொடர்பான ஆறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நேற்றையதினம் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக பொலிஸாருக்கு 06 முறைப்பாடுகள் கிடைத்தன,
அதேநேரத்தில் இந்த காலகட்டத்தில் தேர்தல் வன்முறை தொடர்பான எந்த முறைப்பாடுகளும் பதிவாகவில்லை.
மாத்தளையில் மூன்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் வேட்பாளர்களின் படங்கள் கொண்ட சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
கெபிதிகொல்லாவ பகுதியில் உலர் உணவு விநியோகம் தொடர்பாக ஒரு முறைப்பாடும் பதிவாகியுள்ளது.
பொலன்னறுவையில் உள்ள ஒரு பகுதியில் புதிய தெருவிளக்குகள் பொருத்தப்படுவதாகவும், மொனராகலையில் வேட்பாளரின் படம் பொறிக்கப்பட்ட பதாகைகள் இருப்பதாகவும் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் குவியும் முறைப்பாடுகள் எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு முன்னதாக, நேற்றைய (23) தினம் நாட்டின் நான்கு பகுதிகளிலிருந்து தேர்தல் தொடர்பான ஆறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.நேற்றையதினம் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக பொலிஸாருக்கு 06 முறைப்பாடுகள் கிடைத்தன, அதேநேரத்தில் இந்த காலகட்டத்தில் தேர்தல் வன்முறை தொடர்பான எந்த முறைப்பாடுகளும் பதிவாகவில்லை.மாத்தளையில் மூன்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அவற்றில் வேட்பாளர்களின் படங்கள் கொண்ட சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.கெபிதிகொல்லாவ பகுதியில் உலர் உணவு விநியோகம் தொடர்பாக ஒரு முறைப்பாடும் பதிவாகியுள்ளது.பொலன்னறுவையில் உள்ள ஒரு பகுதியில் புதிய தெருவிளக்குகள் பொருத்தப்படுவதாகவும், மொனராகலையில் வேட்பாளரின் படம் பொறிக்கப்பட்ட பதாகைகள் இருப்பதாகவும் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.